என்ன மனுஷன் சார் நீங்க...! தோல்வியை கொடுத்த சிவாவிற்கு ஏன் இன்னொரு வாய்ப்பு? அஜித் கூறிய தகவல்..!

 
Published : Jan 24, 2018, 07:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
என்ன மனுஷன் சார் நீங்க...! தோல்வியை கொடுத்த சிவாவிற்கு ஏன் இன்னொரு வாய்ப்பு? அஜித் கூறிய தகவல்..!

சுருக்கம்

why ajith acting in director siva movie?

இயக்குனர் சிவா அஜித்தை வைத்து முதலில் இயக்கிய திரைப்படம் 'வீரம்' இந்த படத்தில் அண்ணன், தம்பிகளில் அன்பையும்... குடும்ப உறவுகளின் செண்டிமென்ட்டையும் மையப்படுத்தி இயக்கி இருப்பார். இந்த படம் அஜித்துக்கு மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து அஜித்தை வைத்து சிவா இயக்கிய இரண்டாவது திரைப்படமான 'வேதாளம்' ஹிட் ஆகியதால். பல இயக்குனர்கள் அஜித்தின் கால் ஷீட்டுக்கு போட்டி போட்டும் அவர் மீண்டும் சிவாவிற்கே வாய்புக்கொடுத்தார்.

கடந்த ஆண்டு சிவாவின் இயக்கத்தில் அஜித் மற்றும் காஜல் அகர்வால் நடித்து வெளிவந்த திரைப்படமான, 'விவேகம்' தமிழில் ஒரு ஹாலிவுட் படம் எடுத்தால் எப்படி இருக்குமோ அந்த ரேஞ்சில் இருந்தது. எனினும் இப்படத்திற்கு   கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது.

இந்த படம் தோல்வி அடைந்ததால் அடுத்ததாக அஜித், ஏ.ஆர்.முருகதாஸ் அல்லது அட்லீ இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு சிவாவிற்கு சென்றது.

சிவா 'விவேகம்' என்கிற தோல்வி படத்தை கொடுத்தும் மீண்டும் ஏன் இவருக்கே வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அஜித்திடம் அவருடைய நண்பர்கள் வட்டாரத்தில் பலர் கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு அஜித், சிவா இரண்டு முறை வெற்றி பெற்று ஒரு முறைதான் தோற்றுள்ளார்...  அடுத்து ஒரு படம் இயக்க மற்ற நடிகரிடம் அவர் செல்லும் போது  வெற்றி பட இயக்குனராக தான் நிற்க வேண்டும் என கூறினாராம். 

தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளதால் அஜித்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!
வெட்கம் மானம் சூடு சொரணை இல்லையா? எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!