ஹன்சிகா இப்ப எந்த ரோல் பண்றாங்க தெரியுமா..?

 
Published : Jan 24, 2018, 06:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
ஹன்சிகா இப்ப எந்த ரோல் பண்றாங்க தெரியுமா..?

சுருக்கம்

hansika acting as a negative role in a film

தமிழ் திரையுலகில், 'சின்ன குஷ்பு' என்று செல்லமாக அழைக்கப்படும் அளவிற்கு நடிகை ஹன்சிகா தனது கொழுக்மொழுக் அழகினாலும், துள்ளலான நடிப்பினாலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். தனுஷின் 'மாப்பிள்ளை' படம் மூலம் கோலிவுட்டில் களமிறங்கியவர் விஜய், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழின் உச்சியில் உள்ளார். தற்போது, பொங்கல் விருந்தாக நாளை வெளியாகவிருக்கும் "குலேபகாவலி" படத்தில் ஹன்சிகா முதல்முறையாக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இது குறித்து நடிகை ஹன்சிகா பேசுகையில்,

"எங்கேயும் காதல் படத்திற்கு பிறகு பிரபு தேவா மாஸ்டருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இப்போதும் அதே எனர்ஜி குறையாமல் இருப்பது தான் அவரது ஸ்பெஷல். இது புதையலைத் தேடி செல்லும் கதை. இதில் நான் திருடியாக நடித்திருக்கிறேன். ரொம்ப சீரியசாக இல்ல; வேடிக்கையான ஜாலியான நெகட்டிவ்  ஷேட் கேரக்டர்.

நான் எப்போதும் பாசிட்டிவானவள். அதனால் எனது கேரக்டரும் பாசிட்டிவாகவே இருக்கும். எல்லா படங்களிலும் அழகை மட்டுமே நம்புவதாக கூறுவதை ஏற்க மாட்டேன். ரோமியோ ஜூலியட், போகன் போன்ற படங்களில் நடிப்பு திறமையை நிரூபித்திருக்கிறேன். என்னால் காமெடியும் செய்ய முடியும் என்பதை குலேபகாவலியில் காட்டியிருக்கிறேன்"

என்றார்.

"குலேபகாவலி" படத்தைத் தொடர்ந்து ஹன்சிகா, அதர்வா மற்றும் விக்ரம் பிரபு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி