
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை பூனம் கவுர். இவர் தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே, சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார்.
இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு தமிழில் நடிக்க சில வாய்ப்புகள் கிடைத்தாலும்,அவற்றில் நடிக்க மறுத்துவிட்டார். கதாநாயகியாக நடிக்கா விட்டாலும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் தான் நடிப்பேன் என கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இவர் தமிழில் நடித்து வெளிவந்த 'நெஞ்சிருக்கும்வரை', 'பயணம்', '6 மெழுகு வத்திகள்' கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் ஆபாச நடிகைகளுக்கு தான் மரியாதை கொடுக்கப்படுகிறது ஆனால் இந்தியாவில் வாழும் சாதாரண, ஒன்றும் தெரியாத அப்பாவி பெண்களை பயன்படுத்தி கொள்கின்றனர், பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகின்றனர். இதனை எதிர்த்து போராட நினைத்தாலும் அவர்களை தவறான பார்வையில் பார்த்து அவர்களுடைய மனதையும், மூளையையும் எதுவும் செய்யமுடியாத அளவிற்கு ஆக்கிவிடுகின்றனர் என கூறியுள்ளார்.
பூனம் கவுர் திடீர் என இப்படி ஒரு தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது, பிரபல ஆபாச நடிகையாக இருந்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் சன்னி லியோனை தாக்கி பேசுவது போல் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.