
கடும் சர்ச்சையை ஏற்படுத்திய பத்மாவத் படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகிறது. இந்தியா முழுவதும் 4800 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.
வரலாற்று சிறப்பு மிக்க படமான இந்த படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். ராணி பத்மாவதியாக தீபிகா படுகோனேவும் மன்னராக சாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக ரன்வீரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் கதை வெளியாகியுள்ளது. அதாவது இலங்கையில் 13ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த சிங்கள பேரரசர் மகள் பத்மாவதி. இவர் முத்துக்களை வாங்க இலங்கை செல்கிறார்.
காட்டில் மான்வேட்டையாடும் பத்மாவதி எய்த அம்பு குறி தவறி ராஜபுத்திர வம்சத்தின் சித்தூர் மன்னர் ரத்தன் மீது பாய்கிறது. பின்னர் பத்மாவதி அவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றுகிறார்.
இருவருக்கும் காதல் மலர திருமணம் செய்து கொண்டு சித்தூர் திரும்புகின்றனர். அப்போது பத்மாவதியின் அழகில் மயங்குகிறார் சித்தூர் அரண்மனை ராஜகுரு. இதை தெரிந்துகொண்ட ரத்தன் அவரை நாடு கடத்துகிறார். நாடு கடத்தப்பட்ட ராஜகுரு டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியை சந்திக்கிறார்.
பத்மாவதியின் அழகு பற்றி கூறி அலாவுதீன் கில்ஜியின் ஆசையை தூண்டுகிறார் ராஜகுரு. இதையடுத்து பத்மாவதியை பார்க்காமலே காதல் கொள்ளும் அலாவுதீன் கில்ஜி சித்தூருக்கு படையெடுக்கிறார்.
ஆனாலும் கில்ஜியால் கோட்டையை நெருங்க முடியவில்லை. அரண்மனைக்கு உணவு, தண்ணீர் செல்லும் வழிகளை அடைக்கிறார் அலாவுதீன்.
6 மாதங்கள் முகாமிட்டு அலாவுதீனால் சித்தூர் மன்னரை பணியவைக்க முடியவில்லை. அதனால் சமாதான தூது அனுப்பி கோட்டையில் நுழைந்து ரத்தனை கடத்துகிறார் கில்ஜி.
இதையடுத்து வீரர்களுடன் டெல்லி சென்ற பத்மாவதி அலாவுதீன் கில்ஜி வீரர்களுடன் மோதி மன்னரை மீட்டு வருகிறார்.
மீண்டும் சித்தூர் மீது படையெடுக்கும் அலாவுதீன் மன்னர் ரத்தனை கொல்கிறார். பத்மாவதியை சிறைப்பிடிக்க சித்தூர் கோட்டைக்குள் நுழைகிறார் கில்ஜி.
ஆனால் கில்ஜியிடம் சிக்காமல் நூற்றுக்கணக்கான பெண்களுடன் எரியும் தீயில் இறங்குகிறார் ராணி பத்மாவதி. இறுதிவரை பத்மாவதியை கில்ஜியால் பார்க்க முடியாமல் போகிறது. இதுவே இப்படத்தின் கதை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.