வளர்ந்து வரும் நாயகிகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் உதயநிதி...

Asianet News Tamil  
Published : Oct 14, 2017, 07:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
வளர்ந்து வரும் நாயகிகளுக்கு வாய்ப்பு கொடுக்கும் உதயநிதி...

சுருக்கம்

udhayanithi give the heroine chance for new actress

தயாரிப்பாளரில் இருந்து நடிகராக மாறிய உதயநிதி தன்னுடைய ஆரம்ப கால படங்களில் முன்னணி நடிகைகளான நயன்தாரா, ஹன்சிகா ஆகிய நாயகிகளுக்கு மட்டுமே வாய்ப்புகள் கொடுத்து வந்தார்.

ஆனால் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளுக்கு தன்னுடைய படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கொடுக்க துவங்கியுள்ளார். அந்த வகையில் இவர் நடித்து சமீபத்தில் வெளியான 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்தார்.

இதைத் தொடர்ந்து தற்போது இவர் நடித்து இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள 'இப்படை வெல்லும்' படத்தில் நடிகை மஞ்சிமா மோகனுக்கு வாய்ப்பு கொடுத்தார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதால், தன்னுடைய அடுத்த படமாக,  'இரும்புத்திரை' படத்தை இயக்கிய மித்ரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் இவன் தந்திரன், மற்றும் விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் உதயநிதிக்கு ஜோடியாக  நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதில் இருந்து தற்போது வளர்ந்த நடிகைகளைத் தவிர்த்து, வளர்ந்து வரும் நடிகைகளுக்கு உதயநிதி வாய்ப்பு கொடுக்க தொடங்கியுள்ளது தெரிகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எனக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன் - விஜய் பேச்சு
மீச வச்ச குழந்தையாக மாறிய விஜய்... அப்பாவை பார்த்ததும் பாசத்தில் ஓடோடி வந்து கட்டிப்பிடித்த தளபதி - வீடியோ இதோ