மாரி செல்வராஜின் 'வாழை' படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளிய உதயநிதி!

By manimegalai a  |  First Published Jul 22, 2023, 11:54 AM IST

இயக்குனர் மாரி செல்வராஜின், 'வாழை' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தை  பார்த்து விட்டு, வியர்ந்து பாராட்டியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
 


இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் 'மாமன்னன்'. உதயநிதி ஹீரோவாக நடித்திருந்த இந்த படம், வசூலில் மிரட்டிய நிலையில், அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும், தொடர்ந்து பாராட்டுகளை குவித்தது. மேலும் இந்த படத்தின் மூலம் வடிவேலு நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை பார்க்க முடிந்ததாக கூறினர் ரசிகர்கள்.

சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான மாமன்னன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. விரைவில் இந்த படம் ஓடிடியிலும் வெளியாக உள்ள நிலையில்... இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய அடுத்த படைப்பை வெளியிட தயாராகியுள்ளார். 'வாழை' தோட்டத்தில் பணியாற்றும் சிறுவர்கள், மற்றும் தொழிலாளர்களை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

Latest Videos

Box Office: நேற்று வெளியான அநீதி மற்றும் கொலை படத்தின் முதல் நாள் வசூல்!

கலையரசன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாரி செல்வராஜ் எழுதிய பேய் என்ற சிறுகதையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது இந்த படத்தை பார்த்து விட்டு, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வியர்ந்து பாராட்டியுள்ளார் உதயநிதி.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? லீக்கான பிரபலங்கள் லிஸ்ட்!

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில்,  'வாழை உங்களின் சிறந்த படைப்பு, மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்" என உதயநிதி ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார். இதை தொடர்ந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!