உஷார்... நம்பாதீங்க.. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பில் வெளியிடப்பட்ட எச்சரிக்கை அறிக்கை !

By manimegalai a  |  First Published Jul 21, 2023, 9:07 PM IST

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக கூறி, தற்போது எச்சரிக்கும் விதமாக, சமூக வலைத்தளத்தில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
 


நடிகர் கமல்ஹாசன், நடிப்பை என்பதை தாண்டி ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். கடந்த ஆண்டு, இவர் நடித்து , தயாரித்திருந்த 'விக்ரம்' திரைப்படம் சுமார் 450 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. பல வருடங்களுக்கு பின்னர்... கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது மட்டும் இன்றி, சில திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.

விக்ரம் படத்தின் வெற்றி கொடுத்த உற்சாகத்தில், கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க உள்ளது மட்டும் இன்றி, சிம்புவை வைத்து ஒரு படத்தையும், சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தையும் தயாரிக்க உள்ளார். இப்படி இவர் தயாரிக்கும் படங்களின் பெயர்களை வைத்து தான், சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கும் விதமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் வேற லெவல் அப்டேட்டை வெளியிட்ட லைகா!

இதுகுறித்து வெளியிட்டுள்ள தகவலில், "ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக, எந்த ஒரு காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக வரும் செய்திகள் எவ்வகையிலும் உங்களை வந்தடைந்தாலும், அதை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதி இன்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் எச்சரிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் வரலாற்றில் இதுவே முதல் முறை! சீசன் 4 டைட்டில் வின்னர் யார்? உறுதியான தகவல்!

கமல்ஹாசன் அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து, தற்போது வரை எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகாத நிலையில், அதற்க்கு முன்னதாக சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ள 'கல்கி 2989AD 'படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. 

pic.twitter.com/AlaiXa3M7A

— Raaj Kamal Films International (@RKFI)

 

click me!