Ultimate: பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி கொடுத்த இரண்டு போட்டியாளர்கள்! மகிழ்ச்சியில் துள்ளி குதித்த நீரூப்

Anija Kannan   | Asianet News
Published : Apr 04, 2022, 02:05 PM IST
Ultimate: பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி கொடுத்த இரண்டு போட்டியாளர்கள்! மகிழ்ச்சியில் துள்ளி குதித்த நீரூப்

சுருக்கம்

BB Ultimate: பிக் பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் அனிதா சம்பத் மற்றும் ஷரீக் ரீ என்ட்ரி கொடுத்துள்ளதால், போட்டியாளர்கள் படு குஷியில் உள்ளனர்.

நெதர்லாந் நாட்டின் 'பிக் பிரதர்' நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பிக்பாஸ் , தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் நம்பர் 1 தொலைக்காட்சி நிகழ்ச்சியாக உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது வழங்கப்படும் பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.  

பிக் பாஸ் அல்டிமேட்:

இந்நிலையில் 'பிக் பாஸ் அல்டிமேட்' என்கிற புதிய நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினர். இந்த ரியாலிட்டி ஷோ வழக்கம் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாவதற்கு பதிலாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டது.

இதில், இந்நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதையடுத்து அவர் படப்பிடிப்பு பணிகளில் பிசியானதால் அவருக்கு பதில் சிம்பு தொகுப்பாளராக களமிறங்கினார். 

6 பைனலிஸ்டில் வின்னர் யார்..?

இதில்,  14 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம், டாஸ்கில் வெற்றி பெற்று 15 லட்சத்துடன் சுருதி வெளியேறியதால் தற்போது பாலாஜி, நிரூப், தாமரை, ஜுலி, ரம்யா பாண்டியன், அபிராமி என  6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.   

இவர்கள் 6 பேரும் நேரடியாக, பிக்பாஸ் பைனலுக்கு தேர்வாகியுள்ளனர். வரும் ஏப்ரல் 10ம் தேதி நிகழ்ச்சியின் பைனல் நடக்க இருக்கிறது, இதில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் உள்ளது. இவர்களில்   அதிக ஓட்டு பாலாஜி முருகதாஸிற்கு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

 மேலும் படிக்க ....Yashika Aannand: யம்மாடியோ...செம்ம ஸ்டைலிஸ் லுக்கில் கோட் பட்டனை அவிழ்த்து..யாஷிகா ஆனந்த் கொடுத்த ஹாட் போஸ்.

புதிதாக உள்ளே போன இரண்டு நபர்கள்:

இந்த நிலையில், இது கடைசி வாரம் என்பதால்,நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியேறிய சக போட்டியாளர்களை உள்ளே விடுவது வழக்கம். தற்போது, அந்த வகையில், ஸ்டராங் போட்டியாளராக போட்டியாளர்கள் மத்தியில் பார்க்கப்பட்ட அனிதா சம்பத் உள்ளே சென்றுள்ளார். அவருடன் சேர்ந்து ஷாரிக் சென்றுள்ளார். இவர்கள் இருவரையும், போட்டியாளர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?