vijay : அதான் 4 கார் இருக்குல்ல, சைக்கிள ஏன் எடுத்துட்டு போனீங்க! நெல்சனின் கேள்விக்கு விஜய் சொன்ன 'நச்' பதில்

Published : Apr 04, 2022, 12:08 PM ISTUpdated : Apr 04, 2022, 12:10 PM IST
vijay : அதான் 4 கார் இருக்குல்ல, சைக்கிள ஏன் எடுத்துட்டு போனீங்க! நெல்சனின் கேள்விக்கு விஜய் சொன்ன 'நச்' பதில்

சுருக்கம்

vijay : விஜய் பங்கேற்றுள்ள நேர்காணல் நிகழ்ச்சிக்கு நேருக்கு நேர் என பெயரிடப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியை பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் தான் தொகுத்து வழங்கி உள்ளார்.

நடிகர் விஜய் நடிக்கும் படங்களுக்கு எந்த அளவு எதிர்பார்ப்பு இருக்கிறதோ, அதேபோல் அவர் தனது படங்களின் இசைவெளியீட்டு விழாவில் பேசும் பேச்சைக் கேட்பதற்கென ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பர். கடைசியாக மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கலந்துகொண்டு பேசினார். அதன்பின் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக, அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்து வந்தார்.

பீஸ்ட் படம் ரிலீஸாக உள்ளதால் இதன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்துகொள்வார் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கொரோனா பரவும் அபாயம் இருப்பதன் காரணமாக பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியுள்ளார் நடிகர் விஜய். இந்த நிகழ்ச்சியை பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் தான் தொகுத்து வழங்கி உள்ளார்.

இந்நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 10-ந் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது. இதற்கான புரோமோக்கள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. நேற்று வெளியான புரோமோவில், ‘ஏதாவது குட்டி ஸ்டோரி இருந்த சொல்லுங்க’ என நெல்சன் கேட்க, அதற்கு விஜய் ‘ஸ்டாக் இல்லப்பா’ என பதிலளிக்கிறார். பதிலுக்கு நெல்சன், ‘எங்கயாவது பாக்கெட்ல இருக்கும் தேடி பாருங்க சார்’ என கிண்டலடிக்கும் படியான காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

இந்நிலையில், இன்று வெளியாகி உள்ள புரோமோவில், நடிகர் விஜய்யிடம், அதான் 4 கார் இருக்குல்ல, சைக்கிள ஏன் எடுத்துட்டு போனீங்க என நெல்சன் கேட்க அதற்கு நடிகர் விஜய் சிரித்தபடி பதில் சொல்லும்படியான காட்சிகள் இடம்பெற்று இருந்தன. கடந்தாண்டு தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார். அதனை குறிப்பிட்டு தான் இயக்குனர் நெல்சன் விஜய்யிடன் அந்த கேள்வியை கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Vijay : குட்டி ஸ்டோரி ஸ்டாக் இல்ல நெல்சா.... ‘நேருக்கு நேர்’ நிகழ்ச்சியில் விஜய் கலகல பேச்சு- வைரலாகும் புரோமோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!