
இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக முக்கிய விருதுகளில் ஒன்று கிராமி விருதுகள். கடந்த 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த விருது நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 64-வது கிராமி விருதுகள் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள எம்.ஜி.எம்.கிராண்ட் கார்டன் அரேனாவில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
உலகெங்கிலும் இருந்து ஏராளமான இசை கலைஞர்களும், திரை இசை பிரபலங்களும் இந்த விருது விழாவில் கலந்துகொண்டு உள்ளனர். வழக்கமாக ஜனவ்ரி மாத இறுதியில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு சற்று தாமதமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் 80க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான், கிராமி விருதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அவருடன் அவரது மகன் ஏ.ஆர்.அமீனும் பங்கேற்றுள்ளார். விருது விழாவில் மகனுடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... sivakarthikeyan :சிவகார்த்திகேயனின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றும் நெல்சன்! வேறமாரி சம்பவத்துக்கு ரெடியான எஸ்.கே
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.