
பீஸ்ட் ஆடியோ லாஞ்ச் இல்லை
நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. வழக்கமாக விஜய் படம் ரிலீசாகும் சமயத்தில் அப்படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி நடத்தப்படும். அதில் நடிகர் விஜய் பேசும் பேச்சைக் கேட்கவே தனி ரசிகர் கூட்டமே உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த நிகழ்வு தொடர்ந்து நடந்து வந்தது.
விஜய்யுடன் நெல்சன் நடத்திய நேர்காணல்
ஆனால் பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தப்படவில்லை. கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் அந்நிகழ்ச்சி நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக நடிகர் விஜய் பங்கேற்கும் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை படமாக்கி உள்ளனர். இந்நிகழ்ச்சியை பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் தான் தொகுத்து வழங்கி உள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பின் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய்
கடைசியாக தலைவா படத்திற்காக நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய், தற்போது 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். விஜய் பங்கேற்றுள்ள நேர்காணல் நிகழ்ச்சிக்கு நேருக்கு நேர் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 10-ந் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட உள்ளது.
வைரல் புரோமோ
இதற்கான புரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நடிகர் விஜய்யிடம் பல்வேறு கேள்விகளை இயக்குனர் நெல்சன் கேட்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ‘ஏதாவது குட்டி ஸ்டோரி இருந்த சொல்லுங்க’ என நெல்சன் கேட்க, அதற்கு விஜய் ‘ஸ்டாக் இல்லப்பா’ என பதிலளிக்கிறார். பதிலுக்கு நெல்சன், ‘எங்கயாவது பாக்கெட்ல இருக்கும் தேடி பாருங்க சார்’ என கிண்டலடிக்கும் படியான காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
இதையும் படியுங்கள்... Beast : கில்லி மாதிரி சொல்லி அடிச்ச விஜய்... ஒரே நாளில் வலிமை, KGF 2 பட சாதனைகளை அடிச்சு தூக்கியது பீஸ்ட்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.