Losliya: கவின் உடனான காதல் பிரேக் அப் ஆனதற்கு இது தான் காரணம்...முதல் முறையாக மனம் திறந்த லாஸ்லியா... வீடியோ

Anija Kannan   | Asianet News
Published : Apr 04, 2022, 01:11 PM IST
Losliya: கவின் உடனான காதல் பிரேக் அப் ஆனதற்கு இது தான் காரணம்...முதல் முறையாக மனம் திறந்த லாஸ்லியா... வீடியோ

சுருக்கம்

Losliya: இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். 

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இவர் கொஞ்சி கொஞ்சி பேசும் இலங்கை பாஷையால் ரசிகர்களை கவர்ந்து  இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்துள்ளது. 

லாஸ்லியா - கவின் காதல்:

ஆரம்பத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்த இவருக்கு, கவினுடன் ஏற்பட்ட காதல் கண்ணை மறைக்க காதல் கிசுகிசு விவகாரங்களில் சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டார்.

இதையடுத்து, பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியேறிய பின்பு இவர்கள் காதல் லாஸ்லியா அழுதது, ரசிகர்கள் மத்தியில் தெய்வீக காதல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கவிலியா காதல் குறித்து பல கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தது.

லாஸ்லியாவின் திரைப்படங்கள்:

இதையடுத்து, சில நாட்கள் கடந்ததும் இருவரும் அவரவர் வழியில் பயணிக்க ஆரம்பித்து விட்டார்கள். லாஸ்லியாவிற்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் லாஸ்லியா நடித்திருந்தார்.

'கூகுள் குட்டப்பன்' படம்:

இதை தொடர்ந்து இவர், கேரளா திரைப்படத்தின் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட 'கூகுள் குட்டப்பன்' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தமிழில், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில்,  பிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.

காதல் பிரேக்கப் பற்றி லாஸ்லியாவின் பதில்:

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட  லாஸ்லியா, கவின் உடனான காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில் அவர், பிக்பாஸ் நிகச்சியில் இருந்து வெளியில் வந்ததும், எங்கள் இருவருக்கும் செட் ஆக வில்லை. இருவரும் அவரவர் பாதையில் பயணித்து வருகிறோம். தற்போது பிரிந்து விட்டோம் என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

முன்னதாக கவின் இது தொடர்பாக, காதலில் நாம் கடைசிவரை உண்மையாக இருக்க வேண்டும். எவ்வளவு தூரம் போக வேண்டும் என்றாலும் அதற்காக போகவேண்டும் என்று உருக்கமாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 மேலும் படிக்க ....Yashika Aannand: யம்மாடியோ...செம்ம ஸ்டைலிஸ் லுக்கில் கோட் பட்டனை அவிழ்த்து..யாஷிகா ஆனந்த் கொடுத்த ஹாட் போஸ்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2025-ல் ரசிகர்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களை கதி கலங்க செய்த டாப் 4 படங்களின் பட்டியல்!
கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!