
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகள் பலரும் இதுபோன்ற ஆபாச மெசேஜ், மற்றும் ஆபாசமாக அனுப்பப்படும் புகைப்படங்களை கடந்து வரவேண்டிய நிலை உள்ளது. பெரும்பாலும் இதை சிலர் கண்டுகொள்வதில்லை என்றாலும், தொடர்ந்து டார்ச்சர் செய்யும் விதத்தில் மெசேஜ் அனுப்பப்பட்டால் மன உளைச்சலுக்கு ஆளாகி, காவல் நிலையம் வரை செல்ல தயங்குவதில்லை.
அப்படிதான் பிரபல நடிகை ரஜினி தற்போது பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் தான் 41 வயதாகும் நடிகை ரஜினி. ஒரு சில கன்னட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் டி.வி. சீரியல்களில் தற்போது நடித்து வருகிறார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சியமான பிரபலமாக இருந்து வருகிறார்.
எனக்கு கடவுள் பக்தி ரொம்பவே ஜாஸ்தி – நான் சாமி சிலையை கடத்தல – பஞ்சாயத்தில் சாமூண்டீஸ்வரி!
இவருக்கு ஃபேஸ்புக்கில் தினம் தொடரும் ஏராளமான ஃபிரெண்ட் ரிக்வெஸ்ட்கள், மற்றும் மெசேஜ் வருவது உண்டு. இதில் தனக்கு தெரிந்த நண்பர்களுக்கு ரிப்பிலே செய்வதோடு நன்கு தெரிந்த நண்பர்களிடம் இருந்து வரும் ரெக்வெஸ்ட்களை மட்டுமே அக்செப்ட் செய்துள்ளார். இவருக்கு சமீபத்தில் நவீன்ஸ் என்ற ID-யில் இருந்து ரிக்வெஸ்ட் வந்துள்ளது. அதை ரஜினி நிராகரித்துள்ளார்.
அந்த நபர் விடாப்பிடியாக தினமும் வெவ்வேறு ஐடியில் இருந்து நடிகைக்கு ஆபாசமான மெசேஜ் மற்றும் ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் ஒரே நபர் தான் இது போல் தினமும் தனக்கு மோசமான புகைப்படங்களை அனுப்பி வருவது என்பதை தெரிந்து கொண்ட ரஜினி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
பிக்பாஸ் வீட்டில் கைகலப்பு; பிரவீனை தாக்கிய கம்ருதீனுக்கு ரெட் கார்டு? ஷாக்கிங் ட்விஸ்ட்!
பொலிஸாரின் விசாரணையில், நடிகை ரஜினிக்கு டார்ச்சர் கொடுத்தது... கொடுத்தவர் பெங்களூருவைச் சேர்ந்த நவீன் மோன் என்பதை கண்டுபிடித்தனர். இவர், சர்வதேச அளவில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.