விவேக் உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்திய த்ரிஷா, சந்தானம், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலர்..!

Published : Apr 17, 2021, 11:55 AM IST
விவேக் உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்திய த்ரிஷா, சந்தானம், இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலர்..!

சுருக்கம்

 விவேக் மரணம் தமிழ் திரையுலகை சேர்ந்த ஒட்டு மொத்த ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவருக்கு சமூக வலைத்தளம் மூலமும், நேரடியாகவும் வந்து பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில், தன்னுடைய இன்றியமையாத காமெடியை கூட சமூக கருத்துக்களுடன் புகுத்தி... எளிமையாக மக்களுக்கு புரியவைத்தவர் விவேக். விவேக் மரணம் தமிழ் திரையுலகை சேர்ந்த ஒட்டு மொத்த ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவருக்கு சமூக வலைத்தளம் மூலமும், நேரடியாகவும் வந்து பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவரது இறப்பு செய்தி வெளியான உடனேயே , ரசிகர்களும், பிரபலங்களும் இவரது வீட்டின் முன்பு குவிய துவங்கி விட்டனர். அந்த வகையில் மயில் சாமி, எம்.எஸ்.பாஸ்கர், சூரி, நாசர், சூர்யா, கார்த்தி, ஜோதிகா  உள்ளிட்ட பிரபலங்கள் காலையிலேயே நேரடியாக வந்து  தங்களுடைய அஞ்சலியை செலுத்தினர்.

அந்த வகையில் தற்போது சந்தானம், திரிஷா, இயக்குனர் ஷங்கர், காமெடி நடிகர் காளி வெங்கட், விக்ரம், அருண் விஜய், தாமு, சார்லி  குணச்சித்திர நடிகர்கள், ஆர்த்தி, அவரது கணவர் கணேஷ், ரோபோ ஷங்கர், இயக்குனர்கள் ஏ.எல்.விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் இமான், பிக்பாஸ் கணேஷ் வெங்கட் உள்ளிட்ட பலர்  நேரில் வந்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். விவேக்குடன் பல படங்களில் நடித்துவரும், விவேக்கின் நெருங்கிய நண்பருமான விஜய், தற்போது 'தளபதி 65 ' படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றுள்ளதால், அவருக்கு பதில் அவரது பெற்றோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கமல், ரஜினிகாந்த், டி.ராஜேந்தர் போன்ற பலர் அறிக்கை வெளியிட்டு தங்களுது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும் தொடர்ந்து பலர் இரங்கல் தெரிவிக்க வந்துகொண்டிருக்கின்றன என்பது குவிப்பிடத்தக்கது. நடிகர் விவேக்கின் உடல், இன்று மாலை 5 மணியளவில் மேட்டுக்குப்பம் மின் மயானத்தில், தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?
ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ