Trisha: இந்த மனசு தான் சார் கடவுள்..! மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகானுக்கு.. த்ரிஷா கொடுத்த நச் பதில்!

By manimegalai a  |  First Published Nov 24, 2023, 5:42 PM IST

த்ரிஷா பற்றி அவதூறாக பேசியதற்கு, நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டு மன்னிப்பு கேட்ட நிலையில், இதற்க்கு த்ரிஷா தன்னுடைய ட்விட்டர் மூலம் பதில் கொடுத்துள்ளார்.
 


நடிகர் மன்சூர் அலிகான், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய போது, லியோ படத்தில் தனக்கு த்ரிஷாவுடன் காட்சிகள் வைக்கப்படவில்லை என்பதை மிகவும் அபத்தமான வார்த்தைகளால் வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகை த்ரிஷா, முதல் ஆளாக எக்ஸ் தளத்தில் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்த நிலையில், இதை தொடர்ந்து, தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பலர் தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை ஒன்றை முன் வைத்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து, நேற்று காவல்துறையில் இருந்து வந்த சம்மனை ஏற்றுக்கொண்டு நேரில் ஆஜரானார் மன்சூர் அலிகான்.

Tap to resize

Latest Videos

இதை தொடர்ந்து இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மன்சூர் அலி கான் நடிகை திரிஷா விவகாரம் குறித்து இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

அந்த அறிக்கையில், "ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன். 

காவல் அதிகாரி அம்மையார் திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, 'ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்' என வந்துவிட்டேன். யதார்த்த நிலை! சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசியுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது.! ஜனநாயகத்தின் நான்காவது தூண்,. மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன் கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது. 

எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு!. என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயண உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். 

Nayanthara: திரையுலகில் இயக்குனராக அவதாரம் எடுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்..!

கனிமங்கள், மலை, ஆறு காணாடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய் நிற்கிறோம். குழந்தைகள் கசடறகற்க, சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம். மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால் தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் GST, ST, டோல்கேட், பெட்ரோல் கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால்தான் நாம் அதானிக்கு கப்பம் கட்ட முடியும் அதானிந்தியா மார்பில் தவலும் குழந்தையுடன், இளமங்கை இளவரசியை கட்டிலில் விட்டுச்செல்ல நாம் புத்தனில்லை. ஆம்!

பெண்ணிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம். தாய்க்கு சேவை செய் என்றர் நபிகளார் அவர்கள். பெண்மை புனிதம். காரணத்தோடு தான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8 வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். 

சினிமா பார்க்கவிடாது 10, ஆம் வகுப்புவரை வளர்த்தவர். இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்! எனது சக திரைநாயகி திரிஷாவே, என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன். என தெரிவித்திருந்தார்.

Joe Movie Review: ஃபீல் குட் மூவியா... ஓவராக பீல் பண்ண வைத்த மூவியா? ரியோ ராஜின் 'ஜோ' பட விமர்சனம்!

இவரின் இந்த மன்னிப்பு அறிக்கைக்கு, நடிகை த்ரிஷா... "தவறு செய்வது மனிதம், மன்னிப்பது தெய்வீகம்" என நச் பதிலளித்துள்ளார். இதை தொடர்ந்து இந்த பதிவு வைரலாகி வருகிறது.

click me!