நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி, அடுத்ததாக திரிஷா அம்மனாக நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருபவர் திரிஷா. அவருக்கு வயது 40ஐ தாண்டிவிட்டாலும் இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். 40 வயதிலும் இளமை குறையாமல் காட்சியளிக்கும் திரிஷாவுக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் இருந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனால் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திரிஷா திகழ்ந்து வருகிறார்.
அவர் கைவசம் அஜித்தின் விடாமுயற்சி, மணிரத்னம் இயக்கும் தக் லைப் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ராம், டோவினோ தாமஸ் உடன் ஒரு படம், தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக விஸ்வம்பரா என நடிகை திரிஷாவின் லைன் அப் நீண்டுகொண்டே செல்கிறது. இப்படி மூன்று மொழிகளிலும் மாறி மாறி நடித்து வருவதால் அவரின் மார்க்கெட்டும் தற்போது உச்சத்தில் இருக்கிறது.
இதையும் படியுங்கள்... அப்பா உடன் அவுட்டிங்... லண்டனில் ஜோடிப் புறாக்களாக வலம் வரும் கவிதா மற்றும் அனிதா விஜயகுமார் - போட்டோஸ் இதோ
இதனிடையே நடிகை திரிஷா, மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. மூக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். சரவணன் உடன் இணைந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கிய அப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதனால் அதன் இரண்டாம் பாகத்தை திரிஷாவை வைத்து எடுக்க ஆர்.ஜே.பாலாஜி முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவலின் படி அது மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் இல்லை என்றும், அது அப்படத்தை போன்று பேண்டஸி கதையம்சத்துடன் உருவாவதாகவும், இதில் திரிஷா அம்மன் வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு மாசாணி அம்மன் என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... The GOAT : என்ன நண்பா ரெடியா... விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வெளிவந்த கோட் பட அப்டேட் - குஷியில் ரசிகர்கள்