அஜித் குமாரிடம் மொபைல் போன் எல்லாம் கிடையாது என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.
வளர்ந்துவரும் நாகரீக வாழ்க்கையில் மொபைல் போன் அனைவரிடமும் இருக்கும் ஒரு பொதுவான பொருளாக மாறிவிட்டது. அவரவர், வசதிக்கேற்ப மொபைல் போன்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். மொபைல் இல்லாதவர்கள் என்று எவரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துவிட்டது. அப்படிப்பட்ட இந்த காலகட்டத்தில் ஒரு மாஸ் ஹீரோவாக இருக்கும் அஜித் குமாரிடம் மொபைல் இல்லை என்று சொன்னால் நம்மால் நம்ப முடிகிறதா? இல்லை தானே? நம்பித்தான் ஆகவேண்டும். நடிகை த்ரிஷாவே அதனை உறுதி செய்துள்ளார்.
அந்தர் பல்டி அடித்த சரத்குமார்: அஜித்தும் சூப்பர் ஸ்டார் தான், அமிதாப் பச்சனும் சூப்பர் ஸ்டார் தான்!
அஜித் மற்றும் த்ரிஷா இருவரும் மங்காத்தா, என்னை அறிந்தால், கிரீடம், ஜி, பூர்ணா மார்க்கெட் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இந்தப் படங்களைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் ஏகே62ஆவது படத்திலும் த்ரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் த்ரிஷா நடிப்பில் உருவான ராங்கி படம் வெளியானது. இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் த்ரிஷா கலந்து கொண்டார். அப்போது, த்ரிஷாவிடம், அஜித் குமாரின் மொபைல் நம்பரை எண்ணவாக நீங்கள் சேமித்து வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் 1 மணிக்கு வெளியாகும் துணிவு: வாரிசுக்கு 4 மணி தான்!
அதற்கு த்ரிஷாவோ, அஜித் மொபைல் போன் பயன்படுத்தவில்லை. அவருடன் இருக்கும் அவரது உதவியாளர்
மூலமாக தான் அஜித்தை தொடர்பு கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். இது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் இது தான் உண்மை. அதனால், அஜித் குமாருக்கு தனியாக மொபைல் போன் என்று எதுவும் தேவைப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒவ்வொரு படமும் முடிந்த பிறகு தனது தொடர்பு எண்ணை மாற்றிக் கொண்டே இருப்பாராம். ஏனென்றால், வேறொரு படத்தில் பிஸியாக இருக்கும் போது முந்தைய படக்குழுவினர்கள் யாரும் தன்னை தொந்தரவு செய்துவிடக் கூடாது என்பதில் அஜித் கண்ணும் கருத்துமாக இருப்பாராம். அஜித் சமூக வலைதள பக்கத்தில் கூட இருப்பதில்லை. அஜித்திற்கு பிடித்த விஷயம் என்னவென்றால் பைக் ரேஸ் தான்.
உலகின் மிகப்பெரிய திரையரங்கில் இரவு 12 மணிக்கு திரையிடப்படும் துணிவு!
அஜித்திடம் தான் மொபைல் போன் இல்லை. ஆனால், அவரது மனைவி ஷாலினியிடம் மொபைல் போன் உள்ளது. இவ்வளவு ஏன் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். அண்மையில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11 ஆம் தேதி திரைக்கு வருகிறது. சமீபத்தில் துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.