தமிழகம் முழுவதும் 1 மணிக்கு வெளியாகும் துணிவு: வாரிசுக்கு 4 மணி தான்!

By Rsiva kumar  |  First Published Jan 7, 2023, 10:02 AM IST

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படம் தமிழகம் முழுவதும் இரவு 1 மணிக்கு வெளியாகும் நிலையில், விஜய் நடித்த வாரிசு படம் இரவு 1 மணிக்கு வெளியாகிறது.


அஜித் குமார் நடித்த துணிவு படமும், விஜய் நடித்த வாரிசு படமும் ஒரு நாள் முன் பின் அதுவும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11 ஆம் தேதியும், 12 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஏற்கனவே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டையிட்டுக் கொண்டு வரும் நிலையில், தமிழகம் முழுவதும் துணிவு படம் இரவு 1 மணி காட்சி திரையிடப்படுகிறது. ஆனால், வாரிசு படம் அதிகாலை 4 மணிக்கு தான் ஷோ காண்பிக்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய திரையரங்கில் இரவு 12 மணிக்கு திரையிடப்படும் துணிவு!

Latest Videos

வாரிசு படத்தை விட அஜித்தின் துணிவு படம் தன் தமிழகம் முழுவதும் அதிக திரையரங்குகளை கைப்பற்றியுள்ளது. இவ்வளவு ஏன் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 450க்கும் அதிகமான திரையரங்குகளில் துணிவு படம் தான் திரையிடப்படுகிறது. இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் துணிவு. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பால சரவணன், பிரேம் குமார், ஜி எம் சுந்தர், அஜய், பகவதி பெருமாள், ஜான் கோக்கென், மகாநதி சங்கர், மமதி சாரி, சிபி புவனா சந்திரன், சிராக் ஜானி, பவானி ரெட்டி, ஜி பி முத்து, மோகன சுந்தரம், நயனா சாய் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து துணிவு படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

 

World Biggest Theater France Paris 🇫🇷 12 AM Shows Confirmed! 🔥 pic.twitter.com/KwkrPuo0QA

— EMPEROR AJITH FANS (@EmperorAjithFC)

 

AK 62 படத்தில் தரமான நடிகரை அஜித்துக்கு வில்லனாகும் விக்கி! ஹீரோயின் குறித்து வெளியான சர்ப்ரைஸ் அப்டேட்!

துணிவு படத்தின் தொலைக்காட்சி புரோமோ விளம்பரம் தற்போது தொடங்கியுள்ளது.  அதற்கான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துணிவு படத்திற்கான 12 மணி காட்சிகள் உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய திரையரங்கான லீ கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் அஜித் குமாரின் துணிவு படம் 12 மணிக்கு திரையிடப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்சாருக்கு சென்ற இந்தப் படம் யுஏ சான்றிதழ் பெற்றுள்ளது. அதோடு, 2 மணி நேரமும் 26 நிமிடமும் ரன்னிங் டைம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

துணிவை விட ரூ.100 கோடி அதிக கலெக்‌ஷன்... ரிலீசுக்கு முன்பே வசூல் வேட்டையாடிய வாரிசு - முழு விவரம் இதோ

சமீபத்தில் துணிவு படத்தில் டிரைலர் வெளியாகி யூடியூப்பில் மட்டும் 56 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. துணிவு படத்தில் அஜித்தின் கெட்டப், ஸ்டைல் எல்லாம் மாஸாக தெரிகிறது. அவர் பேசும் வசனமும் ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. முழுக்க முழுக்க குடும்ப கதையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள வாரிசு படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வாரிசு படத்தின் பாடல்களும் கொண்டாடும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

'துணிவு' படத்திற்காக மஞ்சு வாரியருக்கு ஜெட் ஸ்கை பயிற்சி கொடுத்த அஜித்..! அவரே பகிர்துகொண்ட தகவல்!

starts with 1 AM IST shows all over TN, on Jan 11th.. shows will start from 4 AM IST..

All screens in 'Plexes will play in 1 AM and in 4 AM slots..

— Ramesh Bala (@rameshlaus)
click me!