விஜய் மட்டுமல்ல, அஜித் குமார், அமிதாப் பச்சன், ஷாருக்கானும் சூப்பர் ஸ்டார்கள் தான் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
துணிவு மற்றும் வாரிசு படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 11 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், வாரிசு இசை வெளியீட்டு விழா, துணிவு டிரைலர், வாரிசு டிரைலர் என்று ஒவ்வொன்றும் வெளியான போதும் விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டையிட்டுக் கொண்டு வருகின்றனர். வாரிசு இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் தான் நம்பர் 1 நடிகர் என்று தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் 1 மணிக்கு வெளியாகும் துணிவு: வாரிசுக்கு 4 மணி தான்!
பத்திரிக்கையாளர் பிஸ்மி, ரஜினிகாந்த் முன்னாள் சூப்பர் ஸ்டார், விஜய் தான் தற்போது ரியல் சூப்பர் ஸ்டார். அந்தளவிற்கு விஜய் வளர்ந்துவிட்டார். விஜய்யை மக்கள் அந்த இடத்தில் வைத்துவிட்டார்கள் என்று கூறியிருந்தார். இது ஒரு புறம் இருக்க, வாரிசு இசை வெளியீட்டு விழாவின் போது, நடிகர் சரத்குமார், சூர்ய வம்சம் படத்தின் வெற்றி விழாவிலேயே விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறினேன். அந்த மேடையில் கலைஞரும் இருந்தார் என்றும் கூறியிருந்தார்.
உலகின் மிகப்பெரிய திரையரங்கில் இரவு 12 மணிக்கு திரையிடப்படும் துணிவு!
இந்த நிலையில், சரத்குமார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விஜய்யின் வளர்ச்சியை வைத்து விஜய் சூப்பர் ஸ்டாராக வருவார் என்று சூர்ய வம்சம் படத்தின் வெற்றி விழாவில் கூறியதாக வாரிசு இசை மேடையில் நான் சொன்னேன். ஆனால், ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் இல்லை என்றும், அஜித் குமார் சூப்பர் ஸ்டார் இல்லை என்றும் நான் ஒரு போதும் சொல்லவே இல்லை. இவ்வளவு ஏன் அமிதாப் பச்சனும் சூப்பர் ஸ்டார் தான், ஷாருக்கானும் சூப்பர் ஸ்டார் தான். அவர் தான் சூப்பர் ஸ்டார், இவர் சூப்பர் ஸ்டார் இல்லை என்று நான் சொல்லவில்லை. வாழ்க்கையில் சாதிக்கும் ஒவ்வொரு நடிகர்களும் சூப்பர் ஸ்டார்கள் தான் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.