பேட்ட படத்தை விட விஸ்வாசம் 10 கோடி அதிகம் வசூல்...உண்மையை போட்டுடைத்த விநியோகஸ்தர்...

Published : Jan 31, 2019, 12:48 PM IST
பேட்ட படத்தை விட விஸ்வாசம் 10 கோடி அதிகம் வசூல்...உண்மையை போட்டுடைத்த விநியோகஸ்தர்...

சுருக்கம்

பொங்கல் ரிலீஸ் படங்களின் வசூல் பஞ்சாயத்து இன்னும் ஒரு முடிவுக்கு வராத நிலையில், ரஜினியின் ‘பேட்ட’ படத்தை விட அஜீத்தின் ‘விஸ்வாசம்’ படம் குறைந்த பட்சம் 10 கோடியாவது அதிகம் வசூலித்தது என்பதுதான் உண்மை என்று ‘மிக மிக அவர்சரம்’ பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் போட்டு உடைத்தார் ஒரு விநியோகஸ்தர்.

சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் பிரியங்கா நடிப்பில், பெண் காவலர்களின் பிர்ச்சைனைகள் குறித்து பேசும் படமாக உருவாகியுள்ள படம் ‘மிக மிக அவசரம்’. இப்படத்தின் ட்ரெயிலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா பிரசாத் லேப்பில் நேற்று மாலை நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன், சீமான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்ட அவ்விழாவில் பேசிய பிரபல திருச்சி விநியோகஸ்தர்  ஸ்ரீதர், மிக மிக அவசரம்’ படம் குறித்து பேசும் முன்பு ‘பேட்ட’ , விஸ்வாசம்’ படங்களின் வசூல் பிரச்சினைகளுக்கு தான் முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகக் கூறி பேச ஆரம்பித்தார்.

‘அந்த இரு படங்களும் ரிலீசான தேதியிலிருந்தே அவற்றின் வசூல்கள் குறித்து தொடர்ந்து தவறான தகவல்களே அதிகம் பரவி வந்தன. இரு படங்களுமே 100, 150 கோடிகளைத் தாண்டியதாக வந்த செய்திகள் அத்தனையும் பயங்கர கப்ஸா. உண்மையில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் தமிழகத்தில் ரூ.10 கோடி அதிகம் வசூலித்தது. இது மட்டுமே உண்மை’ என்றார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!