மூச்சுத் திணறலால் ஐ.சி.யு. பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரபல மலையாள நடிகர்...

By Muthurama LingamFirst Published Jan 31, 2019, 11:09 AM IST
Highlights

தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள மலையாள இயக்குநர், நடிகர், கதை வசனகர்த்தா சீனுவாசன் திடீர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள மலையாள இயக்குநர், நடிகர், கதை வசனகர்த்தா சீனுவாசன் திடீர் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எர்ணாகுளம் மெடிக்கல் செண்டரில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மூச்சுத் திணறலும், உயர் ரத்த அழுத்தமும் தீவிரமாக இருப்பதாகவும், அவரது உடல்நலம் குறித்து சரியான நிலவரம் அறிவிக்க 24 மணி நேரம் வரை ஆகலாம் என்றும் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

1984ம் ஆண்டு மலையாளத்திரையுலகில் அடியெடுத்து வைத்த சீனுவாசன் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.  89ல் ‘வடக்கு நோக்கி யாந்திரம்’ படத்தின் மூலம் கதாசிரியர் மற்றும் இயக்குநராக அடியெடுத்துவைத்த சீனுவாசன், பிரியதர்ஷன் படங்களுக்கு தொடர்ந்து கதைவசனகர்த்தாவாகப் பங்களித்து வந்தார். ‘சிந்தாவிஷ்டயாய சியாமளா, ‘மழையெத்தும் மும்பே’,’தகரசேந்தா சந்தேஷம்’, ‘உதயநானு தார’,’கத பறயும் போல்’ ஆகியவை இவரது முக்கியமான படைப்புகள். இதில் ‘கத பறயும் போல்’தான் தமிழில் ரஜினி நடித்த குசேலன் ஆக வந்தது.

சீனுவாசனுக்கு இரண்டு மகன்கள். அதில் வினீத் சீனுவாசன் மலையாளத் திரையுலகில் இளம் இயக்குநர்களில் முக்கியமானவராகத் திகழ்கிறார். சீனிவாசன் மலையாளத்தில் கடைசியாக கதை எழுதி நடித்த ‘ஞான் பிரகாசன்’ படத்தை சந்தியன் அந்திக்காடு இயக்கியிருந்தார். விமர்சகர்களும் ரசிகர்களும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடிய படம் இது.

click me!