
ஆனால் ஆரம்பத்திலேயே ஒரு சில பிரச்சனைகள் வெடித்ததால் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இன்றைய தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், கூட்டம் தாமதமாகத்தான் துவங்கியது என்று கூறினார். மேலும் இத்தனை ஆண்டுகளில் முதல் முறையாக இன்றுதான் மேடையில் நிர்வாகிகள் யாரும் இல்லாமல் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டதாகவும், இது குறித்து நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு எந்த பதிலும் கொடுக்கப்பட வில்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் இப்போது வரை கணக்குக் கேட்டதற்கு விஷால் முறையாக பதில் தரவில்லை என்றும், ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி கேள்வி எழுப்பியதற்கும் பதில் சொல்லாமல் ஓடிவிட்டார்... தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.7 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.