
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் `தானா சேர்ந்த கூட்டம்’.
இந்தப் படத்தில் வேறு ஒரு படத்தின் சாயல் உள்ளதாகக் கூறி பல சர்ச்சைகள் வந்தாலும் சமீபத்தில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் டீசரும் படத்தின் மேல் உள்ள எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது.
சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்தப் படத்தில், நவரச நாயகன் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் செந்தில், சரண்யா பொன்வண்ணன், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமய்யா , சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
தற்போது இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை டி.எஸ்.ஆர்.பிலிம்ஸ் அதிக தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளதாகவும கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.