அட இது லட்சுமி மேனனா... பாத்தா ஷாக் ஆகிடுவீங்க..!

First Published Dec 10, 2017, 4:52 PM IST
Highlights
lakshmi menon new look


நடிகை லட்சமி மேனன் கும்கி படத்தில் நடித்த போதே இவருக்கு ரசிகர்கள் பலர் இருந்தனர். இந்தப் படத்தில் இவர் வெளிப் படுத்திய யதார்த்தமான நடிப்பு தமிழ் ரசிகர்கள் பலரையும், தமிழ்ப் பட வாய்ப்புகளையும் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

சில படங்களைத் தொடர்ந்து லட்சுமி மேனன் உடல் எடை போட்டு மிகவும் குண்டாகத் தெரிந்தார். இதனால் பட வாய்புகள் குறையத் தொடங்கின. மேலும் மாடர்ன் பெண் கதாபத்திரத்தில் நடிக்க விரும்பிய இவருக்கு தொடர்ந்து கிராமத்து கதையம்சம் கொண்ட படங்கள் தான் கிடைத்து வந்தன.

தற்போது பிரபுதேவாவுடன் யங் மங் சங் படம் மட்டுமே இவரின் கைவசம் உள்ளது. மேலும் இவர் மற்ற படங்களில் நடிக்காமல் இருப்பதற்குக் காரணம் இவருடைய அம்மா முதலில் படிப்பில் கவனம் செலுத்து என்று மிகவும் கண்டிப்பாக கூறியது தான் எனவும் கூறப்படுகிறது.

கல்லூரி படிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது திடீர் என ஆளே மாறிவிட்டார். மிகவும் குண்டாக இருந்த இவர் தன் உடல் எடையைக் குறைத்து விட்டார். இந்தப் புகைப்படம் ஒன்று தற்போது வலை தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் இதோ

 

click me!