
பிரபல மலையாள நடிகை கல்பனா மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் பாக்யராஜுடன் 'சின்னவீடு', மற்றூம் ரமேஷ் அரவிந்த், கமலஹாசன் நடித்த 'சதிலீலாவதி' ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
கடந்த வருடம் இவர் பட ஷூட்டிங்குக்காகச் சென்ற இடத்தில் திடீர் என மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். தமிழ், மலையாளம் என பல்வேறு படங்களில் குணசித்திர வேடத்தில் கலக்கிய இவரது பிரிவு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியது.
கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, தன்னுடைய மகள் ஸ்ரீ மயியுடன் தனியாக வசித்து வந்த இவர் தமிழில் கடைசியாக நாகார்ஜுனா, கார்த்தி, தமன்னா உள்ளிட்டோர் நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற 'தோழா' படத்தில் நடித்தார்.
தற்போது இவரது மகள் ஸ்ரீ மயி பெரியம்மா கலாரஞ்சனி மற்றும் சித்தி ஊர்வசியின் பாதுகாப்பில் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கல்பனாவின் மகள் மலையாளத்தில் 'குஞ்சியம்மாவும் அஞ்சு பெண்களும்' என்ற படம் மூலம் ஹீரோயினாக நடிக்க வந்துள்ளார். சினிமாவிற்காக தன் பெயரை ஸ்ரீ சங்க்யா என்று மாற்றியுள்ளார்.
இந்தத் தகவல் வெளிவந்தபோது இதை முற்றிலும் மறுத்து வந்தார் இவருடைய சித்தி ஊர்வசி. ஆனால் சமீபத்தில் இந்தப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றபோது ஊர்வசி மூடி மறைத்த உண்மை வெளியே வந்துவிட்டது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.