
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ். மலையாளத்தில் டொவினோ நடித்த கோதா, அபியம், அனுவம், மாயநதி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தமிழில் கூட நடிகர் தனுஷுக்கு வில்லனாக மாரி 2 படத்தில் நடித்திருந்தார். கொரோனா லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன.
இதையும் படிங்க: அச்சு அசலாக சமந்தா போல் மாறிய அதுல்யா... கவர்ச்சி உடையில் கச்சிதமாக கொடுத்த போஸ்கள்...!
இதையடுத்து டொவினோ தாமஸ் நடித்து வந்த கள படத்தின் ஷூட்டிங் எர்ணாகுளம் அருகேயுள்ள பிறவம் என்ற இடத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த படத்தில் திவ்யா பிள்ளை, லால் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். நேற்று இந்த படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, டொவினோவின் வயிற்றில் வில்லன் எட்டி உதைப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது. அப்போது டொவினோ தாமஸின் வயிற்றுப் பகுதியில் பயங்கர வலி ஏற்பட்டதை அடுத்து உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.
இதையும் படிங்க: “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீண்டும் என்ட்ரியாகும் மீனா... படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா?
அங்கு அவரை பரிசோதித்து பார்த்ததில் ஒரு நரம்பு அறுந்து உள் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள டொவினோ தாமஸுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உள் ரத்தக்கசிவு காரணமாக டொவினோ தாமஸ் 3 வாரத்திற்கு கட்டாய ஓய்வில் இருக்க வேண்டும் என்றும், இன்னும் சில நாட்களில் அவர் இயல்பு நிலைக்கு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் காரணமாக கள பட ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.