
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் வாரத்தை, அனிதாவின் போலித்தனம் இல்லாத அதிரடி பேச்சும், நிஷாவின் அசத்தல் காமெடியும் கலகலப்பாக்கி உள்ளது. இப்போதே இந்த இருவருக்கும் ரசிகர்கள் தங்கள் ஆதரவை தெரிவிக்க துவங்கி விட்டனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் அனிதா சம்பத் தான் கடந்து வந்த பாதைகள் பற்றி கூறுகிறார்.
"எனக்கு அட்ரஸ் எதுவும் கிடையாது, எதுலயாவது அட்ரஸ் எழுத வேண்டும் என்றால் கூட எதுவும் எனக்கு தெரியாமல் நிற்பேன். நமக்கு என்று ஒரு வீடு இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைப்பேன்", என் வீட்டில் நான்தான் பெற்றோர் மாதிரி, என்னுடைய அப்பா, அம்மா, தம்பி, எல்லாம் குழந்தை மாதிரி என்று கூறுகிறார்".
அதே நேரத்தில் மற்ற போட்டியாளர்களிடம் அனிதா பேசும் காட்சியும் காட்ட படுகிறது. ‘நான் ரொம்ப கஷ்டப்பட்டு என்னுடைய பெயரை சம்பாதித்து இருக்கிறேன், அதைக் கெடுத்து கொள்ள விரும்பவில்லை என்றும், யார் கூடவும் என்னைக் கம்பேர் செய்யாதீர்கள் என்றும்,தேம்பி தேம்பி அழுகிறார். மேலும் கேமரா முன், எல்லாரையும் சகித்துக் கொண்டு போகும் பழக்கம் எனக்கு கிடையாது, நல்ல பெயர் எடுக்கும் பழக்கம் எனக்கு கிடையாது என்று தெரிவிப்பது போல் இந்த புரோமோ முடிகிறது.
அந்த புரோமோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.