இது என்னடா படு காம பேயாய் இருக்கு? உச்ச கட்ட ஆபாசம்... இருட்டு அறையை மிஞ்சிய 'இரண்டாம் குத்து'..!

By manimegalai aFirst Published Oct 7, 2020, 7:33 PM IST
Highlights

அடல்ட் காமெடி மற்றும் அடல்ட் ஹாரர் படங்களான ’ஹரஹர மகாதேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டுகுத்து’ படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார், அவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம், 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள, 'இரண்டாம் குத்து'.
 
இந்த படத்தில் புதுமுக நடிகை, அக்ரிதி சிங், மீனெல் ஷா, என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் மொட்டை ராஜேந்திரன், பிக்பாஸ் டேனியல், ரவி மரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது டீசர் வெளியாகியுள்ளது.

சற்று முன் வெளியான இந்த படத்தின் டீசர் தற்போது  சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.  இந்த டீசரில் ஆரம்பமே ஆபாசம் என்பது போல் விஜய், விஜய் சேதுபதியின் குட்டிக் கதைகளை ஒப்பிட்டு மொட்டை ராஜேந்திரன், அடல்ட் காமெடி செய்துள்ளார்.

லிப் கிஸ், பெட் சீன், ஏ காமெடி, ஆபாச காட்சிகள் என எதற்கும் பஞ்சம் வைக்காமல், இருட்டு அறையை மிஞ்சிய படி படத்தை இயக்கி, அதில் நடித்துள்ளார் சந்தோஷ். படத்தின் போஸ்டருக்கு எப்படி நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்தார்களோ அதே போல் இந்த படத்தின் டீஸருக்கும் பலத்த விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

அதே டீசர் இதோ...

click me!