திறமையும் நல்ல வசீகரம் இருந்தும், பெரிய அளவில் இவர்களை தமிழ் சினிமா உலகம் பயன்படுத்தவில்லை என்றே கூறலாம்.
அன்றாடம் மனிதனுக்கு இருக்கும் பல பிரச்சனைகளில், இந்த ராசியின் பிரச்சனை தான் பெரும் பிரச்சனையாய் உள்ளது. ஐய்யயோ ராசியே இல்லாத ஆளுப்பா இவரு.. இவருக்கு திருமணம் ஆவது ரொம்ப கஷ்டம் என்று கூற துவங்கி, திரையுலகு வரை பலரை துரத்தி வருகின்றது இந்த ராசி. அந்த வகையில் நல்ல அழகும், திறமையும் இருந்தும், வந்த சுவடு தெரியாமல்போன நடிகைகள் சிலர் உண்டு நம்ம கோலிவுட் உலகில்.
undefined
மஞ்சிமா மோகன்
பெரிய அளவில் பட வாய்ப்புகள் இப்பொது இல்லை என்றாலும், நல்ல முறையில் காதலரை கரம் பிடித்து செட்டில் ஆன நடிகை தான் மஞ்சிமா மோகன். மலையாள பெண்ணான இவர் சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல மலையாள படங்களில் நடித்து வந்தார். 2001ம் ஆண்டுக்கு பிறகு, சுமார் 15 ஆண்டுகள் நடிக்காமல் இருந்த இவர் கதையின் நாயகியாக தமிழில் அறிமுகமான படம் "அச்சம் என்பது மடமையடா".
இதையும் படியுங்கள் : அரசியலில் குதிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்? தீயாய் பரவும் செய்தி!
கடந்த 8 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், உச்ச நடிகை பட்டியலில் இவர் வந்ததில்லை. துவக்கத்தில் இவர் நடித்த சில படங்கள் சரிவர போகாததால் "இவர் ஒரு ராசி இல்லா ராணி" என்ற புரளியும் கிளம்பியது. அழகும் திறமையும் இருந்தும், பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், தான் காதலித்த நடிகர் கவுதம் கார்த்தியை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
வாணி போஜன்
குளுகுளு ஊட்டியில் பிறந்த அழகிய நடிகை, பட்டப்படிப்பை முடித்து பிரபல ஏர்லைன்ஸ் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவருக்கு சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது. அதில் பல ஆண்டுகள் பயணித்து வந்த நிலையில் இவருக்கு கிடைத்த ஒரு வெள்ளித்திரை வாய்ப்பு தான் "ஓர் இரவு" என்ற ஒரு ஹாரர் படம். சுமார் 13 ஆண்டுகளாக இவர் திரைத்துறையில் இருந்துவரும்போது இன்றளவும் ஒரு ப்ரேகிங் கதாபாத்திரம் கூட இவருக்கு அமையவே இல்லை.
ராசி இல்லை என்ற முத்திரை இவர் மீதும் குத்தப்பட, இவர் நடித்த சில படங்கள் இன்னும் கிடப்பில் கிடப்பது இவருக்கு பெரும் சறுக்கலை ஏற்படுத்துகிறது. இடையில் இவர் சிலர் நடிகர்களுடன் டேட்டிங் செய்து வந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் 34 வயது கடந்தும் தனக்காக சரியான சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கிறார் வாணி போஜன்.
கயல் ஆனந்தி
தெலுங்கானா தந்த சிறந்த நடிகை இவர், ஆரம்பத்தில் பல தெலுங்கு படங்களில் நடித்து வந்த நிலையில் தமிழில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான "பொறியாளன்" என்ற படத்தில் நடித்து புகழ்பெற்றார். முக பாவனை, நேர்த்தியான நடிப்பு, அழகு என்று எல்லா அம்சங்களும் இருந்தாலும் இவர் பெரிய அளவில் ஹிட்டாகாமல் இருக்க காரணம் ராசி என்று பலர் கூறினாலும், சரியான கதைகளை தேர்வு செய்யாதது தான் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், கடந்த 2021ம் ஆண்டு சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகியுள்ளார். சாக்ரடீஸ், மூடர் கூடம் நவீனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள் : போதைப்பொருள் வியாபாரியுடன் நமீதாவிற்கு தொடர்பு - கணவர் புகார்!