Rajinikanth : தலைவர் 171.. 7 சிறந்த பிரபலங்களை வைத்து பிளான் போடும் லோக்கி - தீயாய் பரவும் தகவல் - உண்மையா?

By Ansgar RFirst Published Apr 6, 2024, 5:10 PM IST
Highlights

Thalaivar 171 : பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

வெகு சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் என்ற பொழுதும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் ஒரு இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். "மாநகரம்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமான அவர், தொடர்ச்சியாக "கைதி", "மாஸ்டர்", "விக்ரம்" மற்றும் "லியோ" என்று பல ஹிட் திரைப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்து வருகிறார். 

இன்றைய தமிழ் ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் ஒரு இயக்குனராக லோகேஷ் கனகராஜ் உள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக விளங்கிவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ். இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Manasvi: மானஸ்வியோட 11-ஆவது பிறந்தநாளுக்கு.. காரை பரிசாக கொடுத்த நடிகர் 'கொட்டாச்சி'! குவியும் வாழ்த்து!

ஏற்கனவே இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் டைட்டில் வெளியாக உள்ளது. இந்நிலையில் 7 முன்னணி பிரபலங்களை இந்த திரைப்படத்தில் இணைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

இதில் ஏற்கனவே லியோ திரைப்படத்தில் நடித்த சாண்டி மாஸ்டர், தலைவர் 171 படத்தில் இணைவது உறுதியாகி உள்ளது. நடிகராகவோ அல்லது நடன இயக்குனராகவோ தலைவர் 171 திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் இணையவிருக்கிறார். அதேபோல மலையாள சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிவரும் பிரிதிவிராஜ் இந்த திரைப்படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கனவே "ஜெயிலர்" திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன், அவருடைய ரசிகர் சிவகார்த்திகேயன் இணைந்து பணியாற்றுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், லோகேஷ் கனகராஜ் தனது இந்த படத்தில் சிவகார்த்திகேயனை இணைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தலைவர் 171 படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. அதே நேரத்தில் நடிகை திரிஷா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தளபதி திரைப்படத்தில் நடித்த நடிகை ஷோபனா ஆகியோரிடமும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 

மேலும் தலைவர் 171 படத்தில் சூப்பர் ஸ்டாரின் பரம ரசிகரான ராகவா லாரன்ஸ் அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைய வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விஷயங்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Suriya : கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் அடுத்த படம்.. அதற்காக பிரத்தியேக பயிற்சி எடுக்கும் சூர்யா? Viral Pics!

click me!