Manasvi: மானஸ்வியோட 11-ஆவது பிறந்தநாளுக்கு.. காரை பரிசாக கொடுத்த நடிகர் 'கொட்டாச்சி'! குவியும் வாழ்த்து!

Published : Apr 06, 2024, 03:56 PM IST
Manasvi: மானஸ்வியோட 11-ஆவது பிறந்தநாளுக்கு.. காரை பரிசாக கொடுத்த நடிகர் 'கொட்டாச்சி'! குவியும் வாழ்த்து!

சுருக்கம்

குழந்தை நட்சத்திரமான மானஸ்வியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அவரின் தந்தையும், காமெடி நடிகருமான கொட்டாச்சி கார் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில், காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானவர் கொட்டாச்சி. இவரின் மகள் மானஸ்வி, தன்னுடைய 4 வயதிலேயே 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல ரசிகர்களின் மனதை கவர்ந்தார். கொட்டாச்சியின் மனைவி ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட்டாக இருக்கும் நிலையில், அவரின் முயற்சியினாலேயே மானஸ்விக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மானஸ்வி நடிக்க துவங்கிய பின்னரே... கொட்டாச்சியின் வாழ்வாதாரமும் உயர துவங்கியது. இவர் ஒரு சில படங்களில் நடித்து வருவது மட்டும் இன்றி, கழுமரம் என்கிற படத்தை தயாரித்து இயக்கியும் உள்ளார். இந்த ஆண்டு இப்படம் வெளியாகும் என தெரிகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ஏற்க்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Nayanthara : அட்டை படத்திற்கு... கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து முதல் முறையாக கவர்ச்சியாக போஸ் கொடுத்த நயன்!

தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில், குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் மானஸ்வி... கதாபாத்திரத்திற்கு ஏற்றாப்போல், தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர். நயன்தாரா முதல், திரிஷா வரை அனைவருமே இளம் வயதில் மிகவும் திறமையாக நடிக்கும் இவரின் நடிப்பை புகழ்ந்து தள்ளி உள்ளனர். மேலும் பல சமயங்களில் மானஸ்விக்கு நடிப்பு சொல்லி தருவது அவரின் தந்தை தான்.

விஜய், அஜித், முதல்.. நயந்தாரா, சமந்தா வரை... மதம் கடந்து திருமணம் செய்த பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?

இவர் கொட்டாச்சிக்கு ஒரே மகள் என்பதால், ஓவர் செல்லம். மானஸ்வி எது கேட்டாலும் அதை வாங்கி கொடுத்து விடுவார்கள். ஒருமுறை வெளிநாடு செல்ல வேண்டும் என மானஸ்வி அடம்பிடித்து... சென்றதை கூட பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார். இதை தவிர மானஸ்விக்கு புதியதாக கார் வாங்க வேண்டும் எனபது மிகப்பெரிய ஆசையாக இருந்த நிலையில், அந்த ஆசையை... மகளில் பிறந்தநாளில் நிவர்த்தி செய்துள்ளார் கொட்டாச்சி. மகளுக்கு பிடித்த காரை கொடுத்து, இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!