அயலான் தோல்விக்கு பின்... 'இன்று நேற்று நாளை 2' படத்தை இயக்கும் ஆர்.ரவிக்குமார்! பூஜை போட்டாச்சு!

Published : Apr 05, 2024, 10:27 PM IST
அயலான் தோல்விக்கு பின்... 'இன்று நேற்று நாளை 2' படத்தை இயக்கும் ஆர்.ரவிக்குமார்! பூஜை போட்டாச்சு!

சுருக்கம்

அயலான் படத்தை தொடர்ந்து, தன்னுடைய வெற்றி படமான 'இன்று நேற்று நாளை' படத்தின் இரண்டாம் பாகத்தை ரவிக்குமார் இயக்க உள்ள நிலையில்,  இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது.  

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் பேனரில் சி வி குமார் தயாரிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த 'இன்று நேற்று நாளை' அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படம் ஆகும். இதன் இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அயலான்' படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சுமார் ஒன்பது வருடங்களுக்கு பிறகு 'இன்று நேற்று நாளை' இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இன்று நேற்று நாளை 2' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

Pizza 4: 'பீட்சா 4' படத்தில் ஹீரோவான நாசர் மகன் அபி ஹாசன்... ஹீரோயின் இந்த பிக்பாஸ் பிரபலமா?

ரவிக்குமார் எழுத்தில் உருவாகும் இந்த புத்தம் புதிய, சுவாரசிய காலப்பயணத் திரைப்படத்தை பரத் மோகன் இயக்குகிறார். சி வி குமாரிடம் 'மாயவன்' திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இவர், 'இக்லூ' மற்றும் 'இப்படிக்கு காதல்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

'கஜினிகாந்த்', 'இப்படிக்கு காதல்', 'பொய்க்கால் குதிரை' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பல்லு 'இன்று நேற்று நாளை 2' படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர்‍கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். 

அந்த ஹீரோ தான் முக்கியம்... தனுஷை டீலில் விட்ட த்ரிஷா! 'ஆடுகளம்' படத்தில் இருந்து விலக காரணம் என்ன தெரியுமா?

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பரத் மோகன், "ஒரு புதிய கதைக்கருவோடு 2015ல் வெளியான 'இன்று நேற்று நாளை' மக்களை கவர்ந்து பெரிதும் பேசப்பட்டது. அதன் இரண்டாம் பாகத்தை, அதுவும் அத்திரைப்படத்தை தயாரித்த சி வி குமார் அவர்கள் தயாரிப்பிலும், இயக்குநர் ரவிக்குமார் எழுத்திலும் இயக்குவது பெரும் மகிழ்ச்சி. காலப்பயண கதையான 'இன்று நேற்று நாளை 2' திரைப்படமும் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடிக்கும்," என்று கூறினார்.  தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிப்பில் இயக்குநர் ரவிக்குமார் எழுத்தில் பரத் மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'இன்று நேற்று நாளை 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!