Lokesh Kanagaraj : "அந்த ஹாலிவுட் படத்தின் தழுவல் தானா தலைவர் 171?" என்ன படம் அது? தீயாய் பரவும் தகவல்!

Ansgar R |  
Published : Apr 05, 2024, 04:38 PM IST
Lokesh Kanagaraj : "அந்த ஹாலிவுட் படத்தின் தழுவல் தானா தலைவர் 171?" என்ன படம் அது? தீயாய் பரவும் தகவல்!

சுருக்கம்

Thalaivar 171 : பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்தபடியாக உருவாக உள்ள திரைப்படம் தான் "தலைவர் 171". ஏற்கனவே இரு மாபெரும் நடிகர்களை இயக்கிய லோகேஷ், இப்பொது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். இயக்குனர் பாலச்சந்தர், இயக்குனர் எஸ்.பி முத்துராமன், இயக்குனர் மகேந்திரன் போன்ற திறமையான கலைஞர்களால் செதுக்கப்பட்ட ஒரு மாபெரும் நடிகர் தான் சிவாஜி ராவ் கேக்வாட் என்ற இயற்பெயர் கொண்ட ரஜினிகாந்த். 

இந்நிலையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகின்ற அடுத்த திரைப்படத்தில் விரைவில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். வருகின்ற ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி "தலைவர் 171" படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான ப்ரோமோ படபிடிப்பு பணிகள் தற்பொழுது நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றோம். 

Raashi Kanna : கோடிகளில் வருமானம்.. புதிய ஆடம்பர பங்களாவை வாங்கிய ராஷி கன்னா.. சொத்து மதிப்பு இவ்வளவா?

தளபதி விஜய் அவர்களை வைத்து "மாஸ்டர்" மற்றும் "லியோ" ஆகிய இரு வெற்றி திரைப்படங்களை லோகேஷ் கனகராஜ் கொடுத்திருந்தார். அதேபோல தனது கனவு நாயகனான உலக நாயகன் கமலஹாசன் அவர்களை வைத்து "விக்ரம்" என்ற வெற்றி திரைப்படத்தையும் அவர் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய திரைப்படத்திற்காக சுமார் 4 மாத காலங்களாக பணி செய்து வருகின்றார். 

விரைவில் இம்மாத இறுதிக்குள் அப்பட பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஹாலிவுட் உலகில் வெளியான The Purge என்ற படத்தின் தழுவலாக தலைவர் 171 படம் எடுக்கப்பட உள்ளது என்று வலை பேச்சு Youtube சேனலில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 12 மணிநேரம் எல்லாவிதமான குற்றங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. கொலை உட்பட, அப்படிப்பட்ட நேரத்தில் ஒரு பணக்கார குடும்பத்தின் உறுப்பினர்கள், அதிலிருந்து எப்படி தப்பித்தனர் என்பது The Purge படத்தின் கதை சுருக்கம்.

இதை தழுவி தான் லோகேஷ் தலைவர் 171 படத்தை எடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது கோலிவுட் உலகிற்கு செட்டாகுமா? சூப்பர் ஸ்டாருக்கு செட்டாகுமா? என்று இணைவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதே நேரத்தில் லோகேஷ், தான் இயக்கும் படத்தில் சூப்பர் ஸ்டாரின் வில்லத்தனத்தை வெளிக்கொணரத்தான் அதிகம் விரும்புவதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

ஆகையால் தலைவர் 171 படம் எப்படி பட்ட கதைக்களத்தை கொண்டு அமையப்போகிறது என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. 

கனவு வீட்டை கட்டி... எளிமையான முறையில் கிரஹப்பிரவேசம் செய்த விஜய் டிவி மணிமேகலை! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!