Top 10 Tamil Serial : பாரதி கண்ணம்மாவை தூக்கி சாப்பிட்ட கயல்.. பேவரைட் சீரியல்களின் டிஆர்பி இதோ.

By Kanmani P  |  First Published Apr 28, 2022, 5:17 PM IST

 TRP & Rating : இந்த வார டாப் 10 சீரியல்களின் பட்டியலில் கயல் முதலிடத்தில் உள்ளது. ஆல் டைம் பேவரைட்டாக இருக்கும் விஜய் டிவி சீரிஸ் டிஆர்பியில் பின் தங்கி அதிர்ச்சி கொடுத்துள்ளது.


வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரைக்கு ரசிகர்கள் அதிகம் பட்டி தொட்டி எல்லாம் எங்கும் சீரியல் என்னும் அளவிற்கு பிரபல தொலைக்காட்சிகளுடன் தான் பலரது நாளும் கழிகிறது. இதில் முன்னணியில் இருப்பது சன் டிவி, ஸ்டார் விஜய் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பெண்களை முன்னிறுத்தி  சீரியல்கள் தான். 

சன் டிவியில் கயல், சுந்தரி போன்ற நாடகங்கள் முன்னேற்றத்திற்காக போராடும் பெண்களை முன்னிறுத்தி கதைக்களத்தை கொண்டது. அதேபோல ஸ்டார் விஜய் பாரதிகண்ணம்மா, பாக்கியலட்சுமி போன்ற தொடர்களும் கணவனால் துன்புறுத்தப்படும் பெண்கள் அவர்களை மீறி முன்னேற முற்படும் கதையை மையமாகக் கொண்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இவ்வாறு பெரும்பாலான சீரியல்கள் பெண்களை மையப்படுத்தி இருப்பதால் இந்த சீரியல்கள்  இல்லத்தரசிகளின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. பாரதிகண்ணம்மா பாக்கியலட்சுமி போன்ற தொடர்கள் பல வருடகாலமாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால் சமீபத்தில் ஒளிபரப்பாக துவங்கிய கயல் இந்த சீரியல்களின் டிஆர்பியை தூக்கி சாப்பிட்டு இருப்பதே மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...கண்ணை கூசும் கவர்ச்சியில் எமி ஜாக்சன்...கிளாமருக்கு ஒரு எல்லையே இல்லையா?

தந்தையை இழந்த குடும்பத்தில் மூத்த மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதால் அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் கயல் இரண்டு தங்கைகள் ஒரு தம்பியை படிக்க வைத்து திருமணம் செய்து கொடுக்க எதிர்கொள்ளும் துன்பங்களும் போராட்டங்களும், அவரின் துணிவும் ஆக பெண்களை மட்டும் அல்லாது பல தரப்பினரையும் கவர்ந்துள்ளது.

சமீபத்தில் கயல் சுந்தரி ஆகிய இரு நாடகங்களுக்கும் சன் குடும்ப விருது விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் 9 ஏப்ரல் முதல் 15 ஏப்ரல் வரையிலான டிஆர்பி ரேட்டிங் வெளியாகி உள்ளது. அதில் விஜய் டிவியை காட்டிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நான்கு சீரியல்கள் முன்னிலையில் உள்ளன.

மேலும் செய்திகளுக்கு...ஸ்பைடரை தொடர்ந்து தமிழில் வெளியாகும் மகேஷ் பாபு படம்..இந்த முறையாவது வேலைக்காகுமா?

அந்த பட்டியலில் பெண்ணை முன்னிறுத்தி ஒளிபரப்பப்படும் கயல், சுந்தரி அடுத்தடுத்த இடங்களிலும்  சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் வானத்தைப்போல, கணவன் மனைவி ஒற்றுமையை வெளிப்படுத்தும் ரோஜா ஆகிய நான்கு சீரியல்களை வரிசையாக முன்னிலையில் உள்ளன. இதையடுத்தே பாரதிகண்ணம்மா உள்ளது இதைத்தொடர்ந்து கண்ணான கண்ணே அதன்பிறகு பாக்கியலட்சுமி என அடுத்தடுத்த தொடர்கள் இடம் பிடித்துள்ளன. அதன் பட்டியல் இதோ...

  1. கயல் - சன் டிவி - 10.03
  2. சுந்தரி - சன் டிவி - 9. 62
  3. வானத்தைப்போல - சன் டிவி - 9.0 2
  4. ரோஜா - சன் டிவி - 8.19
  5. பாரதிகண்ணம்மா - ஸ்டார் விஜய் - 8.07
  6. கண்ணான கண்ணே - சன் டிவி - 8.0 2
  7. பாக்கியலட்சுமி - ஸ்டார் விஜய் - 7.98
  8. பாண்டியன் ஸ்டோர்ஸ் - ஸ்டார் விஜய் - 7.14
  9. எதிர்நீச்சல் - சன்டிவி - 6.76
  10. ராஜா ராணி 2  - ஸ்டார் விஜய் - 5.95
  11. தமிழன் சரஸ்வதியும் - ஸ்டார் விஜய் - 5.77
  12. அபியும் நானும் - சன் டிவி - 5.80
  13. அன்பே வா - சன்டிவி - 5.04
  14. மௌனராகம் - ஸ்டார் விஜய் - 4.22
  15. சந்திரலேகா - சன் டிவி - 4.12
  16. அருவி - சன் டிவி - 4.12
  17. பாண்டவர் இல்லம் - சன் டிவி - 4.01
  18. தாலாட்டு - சன் டிவி - 3.92
click me!