விஜய்யை பங்கமாய் கலாய்த்த விக்னேஷ் சிவன்...KRK படத்தில் இப்படி ஒரு காட்சி தேவையா? கடும் கோபத்தில் ரசிகர்கள்...

Anija Kannan   | Asianet News
Published : Apr 28, 2022, 01:46 PM IST
விஜய்யை பங்கமாய் கலாய்த்த விக்னேஷ் சிவன்...KRK படத்தில் இப்படி ஒரு காட்சி தேவையா? கடும் கோபத்தில் ரசிகர்கள்...

சுருக்கம்

KaathuVaakula Rendu Kaadhal: விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் முக்கோண காதல் கதையாக இன்று வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்றுள்ளது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் எப்படி?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் முக்கோண காதல் கதையாக இன்று வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்றுள்ளது.

 இந்த திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவுடன் இணைந்து, விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசைமையத்துள்ளார். 

முக்கோண காதல் கதை:

இதில், கண்மணி கதாபாத்திரத்தில் நயன்தாராவும், கதிஜா கதாபாத்திரத்தில் சமந்தாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும், டாக்டர் பட புகழ் ரெடின் கிங்ஸ்லி இந்தப் படத்தில் சிறப்பான காமெடியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

2-வது முறையாக இணைந்த கூட்டணி:

நானும் ரௌடிதான் படத்திற்கு பிறகு, மீண்டும் இணைந்து பெரிய எதிர்பார்ப்புகளுடன் இன்று திரைக்கு வந்துள்ள இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காமெடியை அதிகமாக கொண்டுள்ள இந்தப் படம் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவனின் அடுத்த படைப்பாக வெளியாகியிருக்கிறது. 

இன்று முதல் திரையில் ரீலீஸ்:

மொத்தத்தில், விக்னேஷ் சிவன் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் சிறப்பான திரைக்கதையுடன் அணுகியுள்ளார் என்று விமர்சனங்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.  மறுபுறம் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை, விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். 

கடுப்பான விஜய் ரசிகர்கள்:

என்ன காரணம் என்று பார்த்தால், இந்த படத்தின் ஒரு காட்சியில் விஜய்யின் பிகில் பட முக்கிய காட்சியை ரீ-கிரியேட் செய்துள்ளனர். அதில் ரெடின் கிங்ஸ்லி விஜய்யை போல வசனம் பேசி நடித்துள்ளார். இந்த காட்சி பார்வையாளர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று தந்த நிலையில், விஜய்யின் ரசிகர்களை சிறந்த காட்சியை விக்னேஷ் சிவன் இப்படி செய்திருக்க கூடாது என சினம் கொண்டு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!