“அமைச்சர் ரோஜாவுக்கு பேர் வச்சதே நான் தான்.!” உண்மையை உடைத்த பாரதிராஜா..!

By Ajmal KhanFirst Published Apr 28, 2022, 11:13 AM IST
Highlights

ஆந்திர மாநில அமைச்சராக பதவி ஏற்றுள்ள நடிகை ரோஜாவிற்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், இசையமைப்பாளர்கள் சங்கம்  சார்பாக மே 7 ஆம் தேதி பாராட்டு விழா சென்னையில் நடைபெற உள்ளது.

அமைச்சராக ரோஜா

ஆந்திர மாநில அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு புதியதாக 15 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதல் நடிகை ரோஜாவிற்கு அ கலாச்சார, சுற்றுலா, விளையாட்டு துறை  அமைச்சரவை  ஒதுக்கப்பட்டது. இதனால் தமிழ், தெலுங்கு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் இனி திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைகளில் நடிக்க மாட்டேன் என கூறியது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் திரைத்துரையில் இருந்து அரசியலில் நுழைந்து இன்று அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள ரோஜாவிற்கு தமிழக திரைப்பட துறையினர் சார்பாக பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் வருகிற 7 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் அமைச்சர் ரோஜாவிற்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ரோஜா என  பெயர் வைத்தது ஏன்?

அப்போது பேசிய அமைச்சர் ரோஜாவின் கணவர், ஆர்.கே.செல்வமணி, அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகை ரோஜா 15 வருடமாக கடும் போராட்டத்தை எதிர்கொண்டதாக கூறினார். ஒரு யுத்தம் போல் ரோஜா தீவிரமாக செயல்பட்டதாகவும் அதன் காரணமாகவே இன்று அமைச்சர் பதவியேற்றதாக கூறினார். இதனை தொடர்ந்து பேசிய இயக்குனர் பாரதிராஜா, ரோஜாவிற்கு பெயர் வைத்தது நான்தான் என கூறினார். தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் படம் இயக்கினார். இதற்கான  அப்போது என்னை திருப்பதிக்கு அழைத்து இருந்தார். அந்த சமயத்தில் ஒரு பெண்ணை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். அந்த பெண்ணிற்கு பெயர் சூட்டும்படி கேட்டுக்கொண்டார். அப்போது அந்த பெண் எனக்கு மாலை அணிவித்தார், அந்த மாலையை அந்த பெண்ணிடம் திருப்பி கொடுத்து விட்டு அந்த பெண்ணை பார்த்து இனி உன் பெயர் ரோஜா என கூறினேன் என தெரிவித்தார்.  நான் பெயர் வைத்தால் விளங்காது என எனது அப்பா அம்மா கூறினார்கள். ஆனால் ரோஜா என்னை பெருமைப்பட வைத்துள்ளதாகவும் இயக்குனர் பாரதிராஜா குறிப்பிட்டார்

click me!