செம்ம கெத்தாக சைக்கிள் ஓட்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்...வீடியோ பார்த்து அர்த்தமில்லாத கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள்

By Anu Kan  |  First Published Apr 28, 2022, 5:04 PM IST

Aishwarya Rajinikanth: விவகாரத்திற்கு பிறகு, தனது வழக்கமான நிகழ்வுகள் அனைத்தும் வெளியிடும் ஐஸ்வர்யா ரஜினிகாந் காலையில் சைக்கிளிங் சென்றபோது எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 
 


விவகாரத்திற்கு பிறகு, தனது வழக்கமான நிகழ்வுகள் அனைத்தும் வெளியிடும் ஐஸ்வர்யா ரஜினிகாந் காலையில் சைக்கிளிங் சென்றபோது எடுத்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

ஐஸ்வர்யா-தனுஷ் விவாகரத்து:

நடிகர் ரஜினியின் மூத்த மகள் மூத்த மகள் ஐஸ்வர்யா, கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. பின்னர் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில், குடும்பத்தினரும், நண்பர்களும் இறங்கினர்.

இதையடுத்து,  தங்களது விவாகரத்து குறித்து எந்த முடிவும் எடுக்காமல், இருவரும் தங்களுடைய திரைத்துறையில் பிஸியாக இருந்து வருகிறார்கள். இருவரும் அவ்வப்போது, தங்களுடைய இரு மகன்கள்  யாத்ரா மற்றும் லிங்காவுடன் நேரத்தை செலவழித்து  வருகிறார்கள். 

இதையடுத்து, விவரத்திற்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும், ஐஸ்வர்யா தனது வழக்கமான நிகழ்வுகள் அனைத்தும் புகைப்படம் மூலம் பதிவிட்டு வருகிறார். 

ஃபிட்னசில் அதிக ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா:

ஃபிட்னசில் அதிக ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா, அடிக்கடி ஒர்க்அவுட் செய்யும் போட்டோக்கள், வீடியோக்கள், ஜாக்கிங் செல்லும் வீடியோ போன்றவற்றை வெளியிட்டு வருகிறார். 

Always good vibes ! pic.twitter.com/AAUx1Ljh6U

— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth)

அந்த வகையில்,  இன்று காலை பீச் ரோட்டில் தான் சைக்கிளிங் சென்ற வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவை நீங்களே பாருங்கள். தினமும் இந்த வழியாகத் தான் செல்வீர்களா?. இந்த சைக்கிளின் விலை என்ன அக்கா? என கேட்டுள்ளனர். இதெல்லாம் கூடவா கேட்பீங்க என பலரும் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க....AK 61 படத்தின் அடுத்தடுத்து வெளியான அப்டேட் ..! ஸ்டைலான லுக்கில் அஜித்... குஷி மோடில் ரசிகர்கள்...

click me!