
நடிகர் அல்வா வாசு ரஜினிகாந்த், சரத்குமார், சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்தவர். கடந்த சில மாதங்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாக தகவல் பரவியதை தொடர்ந்து பல நடிகர் நடிகைகள் இவருக்கு உதவி செய்ய முன்வந்தனர்.
ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் பலனளிக்காமல் நேற்றைய தினம் நடிகர் அல்வா வாசு மரணமடைந்தார். இவருடைய மரணம் குறித்து இவருடைய குடும்ப நபர் ஒருவர் கூறுகையில், சக நடிகர் நடிகைகள் இவருக்கு உதவ முன்வந்ததை அறிந்து மிகவும் சந்தோஷப்பட்டார்.
நாங்கள் அனைவரும் ஒரு அளவிற்கு தேறி வந்து விடுவார் என எதிர்பார்த்த போது எங்களை ஏமாற்றிவிட்டு இந்த உலகத்தை விட்டே அவர் போய் விட்டார் என்று கதறி அழுதார். மேலும் இன்றைய தினம் அவருடைய கல்யாண நாள் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.