
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து தமிழ் கலாச்சார முறையில் நெல் குத்தி, புடைத்து அதனை சமைக்கும் படி தெரிவிக்கபடுகிறது.
இதனை ஏற்று அனைத்து போட்டியாளர்களும் சமைக்க தயாராகின்றனர், ஆனால் வையாபுரி தனக்கு இந்த டாஸ்கில் உடன்பாடு இல்லை என்று கூறி வேலை செய்ய மறுப்பதுபோல் கூறுகிறார்.
இதனை தொடர்ந்து இதில் வெற்றிபெற்ற அணிக்கு வகை வகையான உணவுகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த உணவை தோற்று போன அணியில் உள்ள ஆரவ் மற்றும் ஒரு சிலர் சாப்பிட மறுக்கின்றனர். ஆனால் சினேகன் இது அனைவருக்கும் கொடுக்கப்பட்ட உணவு என்றும் ஏன் இதனை சாப்பிட மறுக்கிறீர்கள் என கேட்கிறார். இதனை ஆரவ் மிகவும் கோபமாக சினேகனிடம் சண்டைபோடுவது போல் பேசிவிட்டு எழுந்து போவது போல்எழுந்து செல்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.