Breaking: திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பதவியை ராஜினாமா செய்த திருப்பூர் சுப்பிரமணியம்! அவரே கூறிய காரணம்!

By manimegalai a  |  First Published Nov 16, 2023, 2:33 PM IST

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட திரை அரங்கு உரிமையாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் ராஜினாமா. செய்வதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்பஉடுத்தியுள்ளது.
 


தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை ஈரோடு நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்கம் தலைவர் பொறுப்பில் இருந்தவர் மா.சுப்பிரமணியம். இவரை திருப்பூர் சுப்பிரமணியம் என்றே திரையுலகினர் அழைப்பது வழக்கம்.

இவருக்கு சக்தி சினிமாஸ் என்கிற திரையரங்கையும் நடத்தி வருகிறார். தீபாவளியை முன்னிட்டு அரசாணையை மீறி டைகர் 3 படத்தை காலை 7 மணிக்கு  திரையிட்தாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  ஆன்லைன் புக்கிங் செய்யப்பட்டதற்கான ஸ்கிரீன் ஷார்ட்ஸ் சில வெளியானது. எனவே இதுகுறித்து விளக்கம் கேட்டு, மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து அவருக்கு  நோட்டீஸ் அனுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அவர் விளக்கும் கொடுப்பதை வைத்தே அடுத்த கட்ட நடவடிக்கை ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சுப்பிரமணியன் அதிரடியாக தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "எனது சொந்த வேலை காரணமாக, நமது சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த, அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் என தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இருட்டில் லிப் லாக்... பாத்ரூமில் கொஞ்சல்! எனக்கு மாயா பற்றி முதலே தெரியும்! ஷாக் கொடுத்த பிக்பாஸ் போட்டியாளர்

click me!