விஜயவாடாவில் உள்ள கனக துர்கை அம்மன் கோயிலுக்கு திடீர் விசிட் அடித்த ஹன்சிகா - என்ன விசேஷம் தெரியுமா?

By Ganesh A  |  First Published Nov 16, 2023, 12:22 PM IST

நடிகை ஹன்சிகா மோத்வானி தனது தாயாருடன் வந்து விஜயவாடாவில் உள்ள கனக துர்கை அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.


ஆந்திர மாநிலம் என்.டி.ஆர். மாவட்டம் விஜயவாடாவில் உள்ள கனக துர்கை அம்மன் கோயிலில் நடிகை ஹன்சிகா வழிபாடு செய்தார். ஹன்சிகாவை வரவேற்ற கோயில் அதிகாரிகள் அம்மனை தரிசனம் செய்து வைத்து வேத பண்டிதர்களிடம் வேத ஆசிர்வாதம் வழங்கினர். பின்னர் கோயில் நிர்வாகிகள் ஹன்சிகாவுக்கு அம்மன் திருவுருவப்படம், பிரசாதம் வழங்கினர்.  

தரிசனம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ஹன்சிகா, வளையல் அலங்காரத்தில் துர்கை அம்மனை வழிபாடு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. “மை நேம் இஸ் ஸ்ருதி” படம் எனது நடிப்பில் 17 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக விஜயவாடா வந்ததாகவும்,  அனைத்து பார்வையாளர்களும் தன்னை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

நடிகை ஹன்சிகாவுடன் அவரது தாயாரும் வந்திருந்தார். ஹன்சிகா நடித்துள்ள மை நேம் இஸ் ஸ்ருதி திரைப்படத்தை ஸ்ரீனிவாஸ் ஓம்கார் என்பவர் இயக்கி உள்ளார். தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. இதில் ஹன்சிகா உடன் பூஜா, ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் நரேன், முரளி சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஜயவாடா கனகதுர்கை அம்மனை வழிபாடு செய்த நடிகை ஹன்சிகா pic.twitter.com/VCqKPiKLdR

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

இப்படம் வெற்றிபெற வேண்டி தான் நடிகை ஹன்சிகா, விஜயவாடாவில் உள்ள கனக துர்கை அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது கோவிலுக்கு வந்த நடிகை ஹன்சிகா உடன் ரசிகர்கள் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். அவர் சாமி தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்...  குட்டி TTF ஆக மாறிய தனுஷ் மகன்.. லைசன்ஸ் இல்லாமல் பைக் ஓட்டி வசமாக சிக்கிய யாத்ரா - போட்டோவால் வெடித்த சர்ச்சை

click me!