டிக்-டாக் பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்... சன் டி.வி. கொடுத்த அசத்தல் வாய்ப்பு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 04, 2021, 07:50 PM IST
டிக்-டாக் பிரபலத்திற்கு அடித்த ஜாக்பாட்... சன் டி.வி. கொடுத்த அசத்தல் வாய்ப்பு...!

சுருக்கம்

அதன் பின்னர் காஞ்சனா 3 படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த கேப்ரியலாவிற்கு ஐரா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 

இல்லத்தரசிகள் முதல் வயதான பாட்டி வரை பலரது நடிப்பு திறமையையும் வெளியே கொண்டு வந்தது டிக்-டாக் செயலி. இதன் மூலம் பிரபலமான ஆயிரக்கணக்கானோரில் கேப்ரியலாவும் ஒருவர். கடிதம் மூலம் மெசேஜ் சொல்லும் இவருடைய டிக்-டாக் வீடியோக்கள் சோசியல் மீடியவில் மிகவும் பிரபலம்.  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு” காமெடி நிகழ்ச்சியிலும் பங்கேற்று ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். 

அதன் பின்னர் காஞ்சனா 3 படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த கேப்ரியலாவிற்கு ஐரா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் சின்ன வயது நயன்தாராவாக நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். சமீபத்தில் செத்தும் ஆயிரம் பொன் என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது சன் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் ஒன்றில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கேப்ரியலா. 

கனவுகளுடன் போராடும் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் சுந்தரி என்ற சீரியலில் களமிறங்கியுள்ளார். இந்த சீரியல் தொடர்பான விளம்பரத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள கேப்ரியலா அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ.... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?
அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்