
இந்தப் படத்தில் விஷாலுடன் பிரசன்னா, ஆண்ட்ரியா, அனு இம்மானுவேல், வினய் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதில், கணியன்பூங்குன்றன் என்ற கேரக்டரில் துப்பறிவாளனாக விஷால் நடித்திருந்தது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, "துப்பறிவாளன்-2" படத்தை உருவாக்கும் பணிகளில் மிஷ்கின் ஈடுபட்டுள்ளார்.
தற்போது, அவர் இயக்கத்தில் உருவான உதயநிதியின் "சைக்கோ" படம் நவம்பர் மாத ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், "துப்பறிவாளன்-2" படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வில் மிஷ்கின் பிஸியாக உள்ளார்.
முதல் பாகத்தை தயாரித்த விஷாலே 2-ம் பாகத்தையும் தயாரிக்கிறார். இதேபோல், விஷாலுடன் பிரசன்னாவும் மீண்டும் இணைகிறார். துப்பறிவாளனுக்கு இசையமைத்திருந்த அரோல் கொரோலிக்கு பதிலாக துப்பறிவாளன்-2க்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார்.
நேர்கொண்ட பார்வை, நம்ம வீட்டு ராஜா உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா, துப்பறிவாளன்-2வுக்காக மிஷ்கினுடம் இணைந்துள்ளார்.
முதல்பாகத்தில் பாக்யராஜ், சிம்ரன் ஆகியோர் நடித்திருந்த நிலையில், 2-ம் பாகத்தில் ரகுமான், கவுதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
நவம்பர் மாதம் "துப்பறிவாளன்-2" படத்தை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான பகுதியை லண்டனில் எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.