
மீண்டும் தமிழ் ராக்கர்ஸை அட்டாக் செய்த விஷால்.. ”ஆக்ஷன்” பட டிரெய்லரில் அதிரடி...!
விஷால் நடிப்பில் தயாராகியுள்ள ’ஆக்ஷன்’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. அதில் விஷால் தமிழ் ராக்கர்ஸை தாக்கிப் பேசுவது போல் இடம் பெற்றுள்ள வசனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ’ஆக்ஷன்’. படம் அடுத்தமாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை 4 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என அறிவித்தபடியே, படக்குழு டிரெய்லரை வெளியிட்டுள்ளது. படத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரியே அதிரிபுதிரி ஸ்டேண்ட் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப்படம் விஷாலின் கேரியரில் முக்கிய இடம் பிடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
எப்பவுமே விஷால் படம் என்றாலே அனல் பறக்கும் சண்டை காட்சிகளுக்கும், அசத்தல் பஞ்ச் டைலாக்குகளுக்கும் பஞ்சம் இருக்காது. ஆனால் ’ஆக்ஷன்’ படத்தில் இடம் விஷால் பேசும் வசனம் ஒன்று, தமிழ் ராக்கர்ஸை மிரட்டும் தோனியில் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அந்த டைலாக் என்னனா?, வில்லன்களில் ஒருவனை பார்த்து உன் பின்னால யார் இருக்கா, இதெல்லாம் யார் வேலை என்று கேட்கிறார். இந்த வசனத்தை தான் விஷால் ரசிகர்கள் தமிழ் ராக்கர்ஸ் உடன் இணைந்து மாஸ் காட்டி வருகின்றனர்.
பெரிய பட்ஜெட் படங்களை திட்டம் போட்டு சாய்க்கும் தமிழ் ராக்கர்ஸ், சமீபத்தில் வெளியான ’பிகில்’, ’கைதி’ திரைப்படங்கள் ரிலீஸ் ஆன சில மணி நேரத்திலேயே இன்டர்நெட்டில் வெளியிட்டது. இந்த சமயத்தில் விஷால் பேசும் மாஸ் வசனம் தமிழ் ராக்கர்ஸ் உடன் இணைத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் படத்திற்கு ஆக்ஷன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாலோ என்னவோ, ஹீரோயின் தமன்னாவும் இதில் ஒருசில சண்டை காட்சிகளில் துணிச்சலாக நடித்து கெத்து காட்டியிருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.