அண்ணாசாலையில் துணிவு பட ஷூட்டிங்... மாஸாக வந்த அஜித்தை பார்க்க அலைமோதிய மக்கள் கூட்டம்

By Ganesh A  |  First Published Oct 16, 2022, 12:01 PM IST

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள அண்ணாசாலையில் நடைபெற்று வருவதால் அதைக் காண ரசிகர்கள் திரண்டனர்.


அஜித்தின் 61-வது படம் . எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பாவனி, அமீர், சிபி ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி உள்ளார் இயக்குனர் எச்.வினோத். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக பேங்காக்கில் நடைபெற்றது. அங்கு அஜித், மஞ்சு வாரியர் நடித்த முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேங்காக்கில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பியது படக்குழு.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்... ரஜினிக்கு ரூ.300 கோடியை அள்ளிக்கொடுத்த லைகா..! - எதற்காக தெரியுமா?

சென்னை அண்ணாசாலையில் ‘துணிவு’ பட ஷுட்டிங்... அஜித்தை பார்க்க அலைமோதிய கூட்டம் pic.twitter.com/ZOXrhIX7gS

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை அண்ணாசாலையில் உள்ள எல்.ஐ.சி பில்டிங் முன் துணிவு படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அதில் அஜித், மஞ்சு வாரியர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இருவரும் முகமுடி அணிந்து தீயணைப்பு வாகனத்தின் மீது அமர்ந்திருந்தபோது எடுத்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அண்ணாசாலையில் நடைபெறும் துணிவு படத்தின் ஷூட்டிங்கில் அஜித் கலந்துகொண்டுள்ளதை அறிந்த ரசிகர்கள், அதிகளவில் அங்கு கூடியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்பத்தி வருகின்றனர். துணிவு பட ஷூட்டிங்கால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... சம்பளமே வாங்காமல் அனிருத் இப்படி ஒரு வேலையை செய்கிறாரா..! ஆச்சர்யம் ஆனால் உண்மை

click me!