
Thug Life Ticket Booking : கமல்ஹாசன் நடிக்கும் புதிய படமான 'தக் லைஃப்' வருகிற ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் இணைந்து பணியாற்றும் படம் இது. இருவரும் கடைசியாக நாயகன் என்கிற மாஸ்டர் பீஸ் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தனர். அதன்பின்னர் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் தான் தக் லைஃப். தக் லைஃப் படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் உள்ளன. ஏற்கனவே பல பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, 'விண்விழி நாயகா..' என்ற பாடலை கமலின் மகள் ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார்.
தக் லைஃப் படத்தில் திரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்டோருடன் சிம்புவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. ரவி மோகன், துல்கர் சல்மான் போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்ட படம் இது. ஆனால், தேதி பிரச்சினை காரணமாக துல்கர் மற்றும் ரவி மோகன் படத்திலிருந்து விலகினர். துல்கருக்குப் பதிலாக சிம்புவும், ரவி மோகனுக்கு பதிலாக அசோக் செல்வனும் நடித்துள்ளனர்.
தக் லைஃப் திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விக்ரமை போல் இப்படமும் பான் இந்தியா அளவில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தக் லைஃப் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் இன்று தொடங்கி உள்ளது. சரியாக காலை 8.01 மணிக்கு தக் லைஃப் படத்தின் முன்பதிவு தொடங்கியது. தமிழ், மட்டுமின்றி இந்தி, கன்னடம், மலையாளம் தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் முன்பதிவு தொடங்கி உள்ளது. இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளதால், டிக்கெட் முன்பதிவும் படுஜோராக நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவிற்கு எட்டாக்கனியாக இருக்கும் 1000 கோடி வசூலை தக் லைஃப் எட்டிப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படம்தான் 'தக் லைஃப்'. ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்பது கமல்ஹாசனின் கதாபாத்திரத்தின் பெயர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தான் இசையமைத்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகப் பணியாற்றி உள்ளார். ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அலி ஃபாசல், பங்கஜ் திரிபாதி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜிஷு சென்குப்தா, சன்யா மல்ஹோத்ரா, ரோஹித் ஷெரஃப், வையாபுரி உள்ளிட்டோர் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.