
Opal Suchata Wins The Miss World 2025 Title : மிஸ் உலகம் 2025 பட்டத்தை தாய்லாந்து அழகி ஓபல் சுசாதா வென்றுள்ளார். இதன் மூலம் மிஸ் உலக கிரீடம் ஆசிய கண்டத்திற்கு வந்துள்ளது. இறுதிச் சுற்றில் மார்ட்டினிக் (அரெல்லி ஜாவோச்சிம்), எத்தியோப்பியா (ஹசெட் டிரெஜ் அட்மாசு), போலந்து (மஜா லாட்ஜா), தாய்லாந்து (ஓபல் சுசாதா சௌங்ஸ்ரி) ஆகியோர் இடம்பிடித்தனர். இவர்களில் இறுதி வெற்றியாளராக மிஸ் தாய்லாந்து ஓபல் சுசாதா அறிவிக்கப்பட்டார்.
தாய்லாந்து அழகி ஓபல் சுசாதா மிஸ் உலக கிரீடத்தை வென்று சாதனை படைத்துள்ளார். முதல் ரன்னர் அப்பாக எத்தியோப்பிய அழகி ஹசெட் டிரெஜ், இரண்டாம் ரன்னர் அப்பாக போலந்து அழகி மஜா லாட்ஜா, மூன்றாம் ரன்னர் அப்பாக மார்ட்டினிக் அழகி அரெல்லி ஜாவோச்சிம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஓபல் சுசாதாவின் வயது 21. புதிய மிஸ் உலகமாகத் தேர்வாகி சாதனை படைத்த இந்த இளம் அழகிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
மிஸ் உலக கிரீடத்தை வென்ற பிறகு ஓபல் பேசுகையில், “இது எனது தனிப்பட்ட வெற்றி அல்ல. மாற்றத்திற்காக பாடுபடும் ஒவ்வொரு பெண்ணின் வெற்றி. மிஸ் உலக பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இனிமேல் மிஸ் உலகமாக எனது நேரத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக செலவிடுவேன்” என்று குறிப்பிட்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.