அழகும் இருக்கு... கலைக்கும் குறைவில்லை.. அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற மூன்று பெண் போட்டியாளர்கள்..

Published : Oct 03, 2021, 09:26 PM IST
அழகும் இருக்கு... கலைக்கும் குறைவில்லை.. அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற மூன்று பெண் போட்டியாளர்கள்..

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து அழகுகிற்கும், திறமைக்கும் குறைவில்லாத வகையில் மூன்று பெண் போட்டியாளர்கள் நுழைந்துள்ளார்.  

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து அழகுகிற்கும், திறமைக்கும் குறைவில்லாத வகையில் மூன்று பெண் போட்டியாளர்கள் நுழைந்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரும் எதிர்பார்த்த, 'சின்னத்தம்பி' சீரியல் நடிகை பவானி ரெட்டி கலந்து கொண்டுள்ளார். தான் கடந்து வந்த பாதை, ஒரு ஃபேஷன் டிசைனராக ஆசைப்பட்டு, எப்படி ஒரு நடிகையாக மாறினேன் என்பதையும், தன்னுடைய முதல் கணவரின் இழப்பு குறித்தும் மிகவும் உருக்கமாக தெரிவித்த பவானி ரெட்டி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உறுதுணையாக இருந்தது, தன்னுடைய கணவரின் குடும்பம் தான் என தெரிவித்துள்ளார்.

இவரை தொடர்ந்து 9 ஆவது போட்டியாளராக பிரபல நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு உள்ளே வந்தார். நாட்டுப்புற பாடகி என்பதை தாண்டி, இந்த கலையை வளர்க்க அவர் எவ்வளவு பணிகளை செய்து வருகிறார் என்பது குறித்தும் கமல்ஹாசனே தெரிவித்து தன்னுடைய வாழ்த்துக்களையும் கூறினார். பின்னர் தன்னை பற்றியும் தன்னுடைய கலை குறித்தும் சின்னப்பொண்ணு பேசுகையில்...

"தான் ஒரு கலைக்குடும்பத்தில் இருந்து வந்தவர், அப்பா, அண்ணன் , என அனைவருமே நாதஸ்வர வித்வான்கள். அதே போல் நான் புகுந்த வீடும் கலை குடும்பன் தான். தன்னுடைய கணவர் அனைத்து கிராமியக்கலை இசைகளையும் இசைக்க கூடியவர், பாட கூடியவர். இதனால் நான் நாட்டுப்புற பாடல்கள் பாடுவதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். கொரோனா காலத்தில் நாட்டுப்புற கலை மிகவும் நலிந்துவிட்டது. எந்த ஒரு பட வாய்ப்புகளும் இல்லை. இந்த நிகழ்ச்சி மூலம் என்னுடைய கிராமியக்கலையை வளர்ப்பது மட்டும் இன்றி, தனக்கு வாய்ப்புகளும் கிடைக்கும் என நம்பிக்கையோடு கூறியுள்ளார்.

இவரை தொடர்ந்து 10 ஆவது போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருப்பவர் மலேசிய மாடலான நதியா சங். மூன்று பெண் குழந்தைகளுக்கு தாயான இவர், தன்னுடைய குடும்பத்தின் உறுதுணையோடு தொடர்ந்து பல்வேறு மாடலிங் நிகழ்ச்சிகளை இன்டர்நேஷனல் லெவலில் செய்து வருவதாக தெரிவித்துள்ளார். எனவே இந்த முறை பிக்பாஸ் வீட்டிற்குள், அழகிற்கும் குறைவிருக்காது, அதே நேரத்தில் கலைகளுக்கும் குறைவிருக்காது என்றே தோன்றுகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தினமும் 20 மாத்திரைகள் சாப்பிடுகிறேன்! உருக்கமாக பேசிய நடிகை மீரா மிதுன்! அதிரடி காட்டிய கோர்ட்!
கணவருக்காக கொந்தளித்த சாண்ட்ரா; கதறவிட்ட திவ்யா; பிக்பாஸ் அப்டேட்!