பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த விஜய் டிவி பிரபலம்... ஜெர்மனியை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர்..!!

Published : Oct 03, 2021, 07:29 PM IST
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த விஜய் டிவி பிரபலம்... ஜெர்மனியை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர்..!!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது போட்டியாளராக சீரியல் நடிகர் ராஜு ஜெயமோகனும் (Raju Jayamohan)  மூன்றாவது போட்டியாளராக ஜெர்மனியை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரும் (costume designer mathumitha) என்ட்ரி கொடுத்துள்ளனர்.  

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது போட்டியாளராக சீரியல் நடிகர் ராஜு ஜெயமோகனும் மூன்றாவது போட்டியாளராக ஜெர்மனியை சேர்ந்த ஆடை வடிவமைப்பாளரும் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இன்று துவங்கிய பிக்பாஸ் சீசன் 5  நிகழ்ச்சியில் போட்டியாளராக யார் யார் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் போட்டியாளராக, சென்னையை சேர்ந்த கானா இசை பாடகி இசை வாணி என்ட்ரி கொடுத்தார்.

இவரை தொடர்ந்து, நாம் இருவர் நமக்கு இருவர், சரவணன் மீனாட்சி, கானா காணும் காலங்கள் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ராஜு ஜெயமோகன் உள்ளே வந்தார். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சைலண்டாக காமெடி செய்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பதில் இவர் வல்லவர் என்றே கூறலாம். ஒரு இயக்குனராக வேண்டும் என்பது தான் தன்னுடைய ஆசை என்றும், தற்போது நடிகராகிவிட்டதாகும் தன்னுடைய வாழ்க்கை பற்றி ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இவரை தொடர்ந்து மூன்றாவது போட்டியாளராக ஜெர்மனி நாட்டை சேர்ந்த, பிரபல மாடலும், ஆடை வடிவமைப்பாளருமான மதுமிதா என்ட்ரி கொடுத்தார். ஜெர்மனியில் பிறந்து வளர்ந்த இவர், ஆஸ்திரேலியாவில் படித்தவர். அதே நேரத்தில் தமிழிலும் மிக அருமையாக பேசுகிறார். தற்போது தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். அடுத்தடுத்து போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்து வருகிறார்கள்.

இவரை தொடர்ந்து பிரபல யூடியுப் விமர்சகரான, அபிஷேக் அசாதனால நடனத்தோடு என்ட்ரி கொடுத்தார். இவரை கமல்ஹாசன் கலாய்ப்பது போல் விமர்சனத்தின் மூலம் பிரபலமானவர் நீங்கள், உங்கள் மீதே பல விமர்சனங்கள் வரும், அதை எப்படி எதிர்கொள்வீர்கள் என கேட்டபோது. பல்வேறு விமர்சனங்கள் வரும் அதில் அன்னா பறவை போல், தேவையானதை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் இன்று அபிஷேக் பிறந்தநாள் என்பதை அறிந்து அவருக்கு கமல் தன்னுடைய வாழ்த்துக்களையும் கூறி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

வீட்டிற்குள் நுழைந்ததும் ஒருவர் மீது ஒருவர் அன்பாக பாசம் பாராட்டும் நிலையில், ரசிகர்கள் எதிர்பார்ப்பது போல் நாளைய தினமே பிரச்சனைகள் சூடு பிடிக்குமா... அல்லது ஆறப்போட்டு பிரச்னையை துவங்குவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!