#BREAKING உல்லாச கப்பலில் போதை பொருள் பார்ட்டி.. ஷாருக்கான் மகனிடம் 20 மணிநேரம் விசாரணைக்கு பின் கைது..!

Published : Oct 03, 2021, 04:56 PM IST
#BREAKING உல்லாச கப்பலில் போதை பொருள் பார்ட்டி.. ஷாருக்கான் மகனிடம் 20 மணிநேரம் விசாரணைக்கு பின் கைது..!

சுருக்கம்

மும்பையில் இருந்து கோவாவுக்கு 3 நாள் சுற்றுலாவாக கார்டிலியா என்ற சொகுசு கப்பலில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதில், போதை  பொருள் விருந்து பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக போதை தடுப்பு பிரிவுக்கு முன்கூட்டியே ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

மும்பை கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாரூக்கான் மகனிடம் 20 மணிநேரம் விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். 

மும்பபையில் இருந்து கோவா செல்ல உள்ள கப்பலில் போதை பொருள் விருந்து பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், என்சிபி குழு, அதன் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான போலீசார், நேற்று மும்பை கடற்கரையில் கப்பலில் நடந்த பார்ட்டி ஒன்றை சோதனை செய்தனர்.

மும்பையில் இருந்து கோவா, குஜராத் அருகே உள்ள டாமன், டையூ உள்ளிட்ட இடங்களுக்கு கப்பலில் சுற்றுலா நடத்தப்படுகிறது. இதற்காக சில தனியார் நிறுவனங்கள் சொகுசு கப்பல்களை வாடகைக்கு பெற்று கடல் சுற்றுலாக்களை நடத்துகின்றனர். இந்த சொகுசு கப்பலில் சுமார் 1000 பயணிகள் பயணம் செய்ய முடியும். இந்த உல்லாச கப்பல் பயணங்களில் கோடீஸ்வரர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள், திரையுலக பிரபலங்கள், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள், பெரிய வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பங்கேற்பது வாடிக்கை. வழக்கமாக வார இறுதி நாட்களில் இந்த பயணங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், மும்பையில் இருந்து கோவாவுக்கு 3 நாள் சுற்றுலாவாக கார்டிலியா என்ற சொகுசு கப்பலில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதில், போதை  பொருள் விருந்து பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக போதை தடுப்பு பிரிவுக்கு முன்கூட்டியே ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து,  20 அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் போல மாறுவேடத்தில் அந்த கப்பலில் சென்றனர். அவர்கள் கப்பலில் உள்ள பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது அவர்களுக்கு போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக களத்தில் குதித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களை சுற்றி வளைத்தனர். போதைப் பொருட்களை விநியோகம் செய்த 8 இளைஞர்களை கைது செய்தனர். போதைப் பொருட்களை பயன்படுத்திய இளைஞர்கள், இளம் பெண்களையும் தனிமைப்படுத்தி அவர்கள் விசாரணை செய்தனர். அப்போது அவர்களில் இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் இருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, மும்பகை்கு அழைத்து வரப்பட்டு நடிகர் ஷாருக்கான் மகனிடம் 20 மணிநேரம் விசாரணை நடத்திய பிறகு ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜே சித்ராவைத் தொடர்ந்து... நடிகை ராஜேஸ்வரியின் விபரீத முடிவு: திரையுலகைத் தாக்கும் மரண அலை!
கடையில் காசு பணத்தை ஆட்டைய போட்டாரு இவரு: மாமனாரை பற்றிய உண்மையை சொன்ன சரவணன்!